hello madras mobile banner 1200x300

பொம்டிலாவில் புத்தரின் புனிதப் பொருட்கள் கண்காட்சி: நவம்பர் 13-ம் தேதி வரை நடக்கிறது

சென்னை – 10 நவம்பர், 2026 புத்தரின் புனிதப் பொருட்கள், அருணாச்சலப் பிரதேச மாநிலம், பொம்டிலா பகுதிக்கு 2026 நவம்பர் 8-ம் தேதி வந்தடைந்தது. இங்கு புத்தரின் புனிதப் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக நவம்பர் 13-ம் தேதி வரை வைக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம், புதுதில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகம், அருணாச்சலப் பிரதேச அரசு, சர்வதேச பவுத்த கூட்டமைப்பு சார்பில் செய்யப்பட்டுள்ளது.

தவாங்கில் இருந்து ஹெலிகாப்டர் மூலம், கொண்டுவரப்பட்ட புத்தரின் புனித பொருட்களுக்கு மத்திய கலாச்சாரத்துறை அமைச்சக அதிகாரிகள், அருணாச்சலப்பிரதேச அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து காட்சிப்படுத்தப்பட்ட புத்தரின் புனிதப் பொருட்களை, முதல்நாளில் புத்த துறவிகள், மூத்தகுடிமக்கள் உள்ளிட்ட 4 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்.

பொம்டிலா பகுதியில் நடைபெறும் கண்காட்சியை தொடர்ந்து, அருணாச்சலப் பிரதேசத்தின் நம்சாய் பகுதியில் உள்ள புத்தர் கோயிலான கோல்டன் பகோடாவில் புத்தரின் புனிதப் பொருட்கள், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளன. இக்கண்காட்சி, 2026 நவம்பர் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து, நவம்பர் 21-ம் தேதி அன்று புத்தரின் புனிதப் பொருட்கள் புதுதில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திற்கு மீண்டும் எடுத்துச் செல்லப்பட உள்ளன.

முன்னதாக, அருணாச்சலப் பிரதேச மாநிலம், தவாங்கில் நவம்பர் 7-ம் தேதி வரை நடைபெற்ற கண்காட்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், புத்தரின் புனிதப் பொருட்களை பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

Read the full e-paper

Translate »