சென்னை – 10 நவம்பர், 2026 மத்திய புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை சார்பில், சிறப்பு தூய்மை இயக்கம் 6 மூலம், 2026 அக்டோபர் 2 முதல் 31- ம் தேதி வரை தூய்மைப் பணி நடைபெற்றது. தூய்மைப்பணி, அலுவலக மேலாண்மை, பொதுமக்களின் குறைத்தீர்ப்பு போன்றவை மத்திய புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையினர், தன்னாட்சி அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மூலம் வெற்றிகரமான செய்து முடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்களை சுத்தம் செய்தல், குப்பைகளை தரம்பிரித்து அகற்றுதல், மின்னணு கழிவுகளை அகற்றுதல், ஆவணங்கள் மேலாண்மை மூலம் கோப்புகளை சரிபார்த்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னாட்சி அமைப்புகள், துறை சார்ந்த ஊழியர்களின் கடும் உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் சிறப்பு தூய்மைப்பணி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
