hello madras mobile banner 1200x300

சிறப்பு தூய்மை இயக்கம் 6-ன் கீழ் சட்டத்துறை தூய்மைப்பணி உள்ளிட்டவற்றில் சிறப்பாக ஈடுபட்டது

சென்னை – 10 நவம்பர், 2026 சிறப்பு தூய்மை இயக்கம் 6-ன் கீழ் மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சகத்தின் சட்ட விவகாரத்துறை பல்வேறு தொடர் முன்முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.

முன்னேற்பாடு கட்டத்தின்போது அத்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகளை துறைசார்ந்த பல்வேறு அலுவலகங்களுக்கு அனுப்பி தூய்மையே சேவை, சிறப்பு தூய்மை இயக்கம் 6 ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கச் செய்தது.

சிறப்பு தூய்மை இயக்கத்தின் அமலாக்கக் கட்டத்தின்போது துறையின் சார்பில், தூய்மைப் பணிகள், நிலுவையில் இருந்த குறிப்புகளை நீக்குதல், காலாவதியான ஆவணங்களை ஆய்வுசெய்து நீக்குதல், குறைதீர்ப்பு உள்ளிட்ட பணிகளில் அத்துறை ஈடுபட்டது.

மொத்தம் 27 ஆயிரத்திற்கும் அதிகமான நேரடிக் கோப்புகள் ஆய்வுசெய்யப்பட்டு அது 15,679 கோப்புகள் நீக்கப்பட்டன. அதேபோல், 20,572 மின்னணு கோப்புகள் ஆய்வுசெய்யப்பட்டு 17,789 கோப்புகள் நீக்கப்பட்டன. பழைய பொருட்களை அகற்றியதன் மூலம் ரூ.4.71 லட்சம் வருவாய் கிடைத்தது.

Read the full e-paper

Translate »