hello madras mobile banner 1200x300

அக்னி வீரர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு: ஐஎன்எஸ் சில்காவில் நடைபெறுகிறது

சென்னை – 10 நவம்பர், 2026 இந்திய கடற்படையின் அக்னி வீரர்களின் 9- வது குழு, இந்திய கடலோர காவல்படையின் நாவிக்குகளின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு 2026 நவம்பர் 13 அன்று ஐஎன்எஸ் சில்காவில் நடைபெற உள்ளது.

இதில் கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு அணிவகுப்பை ஆய்வுசெய்யும் அதிகாரியாக பங்கேற்கிறார்.

இந்த அணிவகுப்பு 16 வார கால பயிற்சியில் பங்கேற்ற 3,300- ம் மேற்பட்ட பயிற்சியாளர்களின் வெற்றிகரமான நிறைவைக் குறிக்கிறது. இது ஐஎன்எஸ் சில்காவில் இருந்து பயிற்சியை நிறைவுசெய்து வெளியேறும் மிகப்பெரிய எண்ணிக்கையிலான குழு இதுவாகும்.

இப்பயிற்சியில் கல்வி, உடற்பயிற்சி, நீச்சல், அணிவகுப்பு பயிற்சி, வெளிப்புற செயல்பாடுகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து அவர்களுடைய பணிக்கு முழு அடித்தளத்தை அளிக்கிறது.

கடமை, மரியாதை, துணிச்சல் ஆகிய கடற்படையின் முக்கிய மாண்புகளை அவர்களுக்குள் உருவாக்கச் செய்யும் அதேவேளையில், குணநலன், தலைமைத்துவம், ஒழுக்கம், நட்புறவு, குழுப்பணி ஆகியவற்றிற்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இந்நிகழ்வில் பயிற்சி பெற்றவர்களின் குடும்பத்தினர் கலந்துகொள்வதோடு, பயிற்சியாளர்களுக்கு பெருமை, சாதனை ஆகியவற்றுக்கான ஒரு தருணமாக அமையும். அத்துடன் கடற்படை முன்னாள் வீரர்களும், சிறப்பு விருந்தினர்களும் கலந்துகொள்கின்றனர்.

Read the full e-paper

Translate »