hello madras mobile banner 1200x300

இந்தியா – மியான்மர் இடையேயான முதலாவது இருதரப்பு முப்படைகளின் கூட்டுப்பயிற்சி சென்னையில் நிறைவடைந்தது

சென்னை – 10 நவம்பர், 2026 இந்தியா – மியான்மர் இடையேயான முதலாவது இருதரப்பு முப்படைகளின் மனிதநேய உதவி மற்றும் பேரிடர் நிவாரண கூட்டுப் பயிற்சியான ரஹத் மித்ரா சென்னையில் 2026 நவம்பர் 5, 6-ம் தேதிகளில் நடைபெற்றது.

இந்த 2 நாள் பயிற்சியில் இந்திய ராணுவம், இந்தியக் கடற்படை, இந்திய விமானப்படை ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்களும், மியான்மர் பாதுகாப்புப்படையினரும் பங்கேற்றனர். பேரிடர் காலங்களில் ஒருங்கிணைந்து செயல்படும் திறனை மேம்படுத்துதல், சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்ளுதல் ஆகியவை குறித்தும் பயிற்சியில் கவனம் செலுத்தப்பட்டது.

இப்பயிற்சி, கூட்டுத் திட்டங்கள், மனிதநேய உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் செயல்பாட்டுத்திறன்களை அறிந்துகொள்வதுடன் தொடங்கியது. கடும் புயல் சூழலின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய ஒருங்கிணைந்த மீட்பு நடவடிக்கைகள், பேரிடர் மேலாண்மை நடைமுறைகளை குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன் இந்திய ராணுவத்தின் சார்பில் தடைகளை களைதல், தற்காலிகப் பாலங்களை அமைத்தல் தொடர்பான செயல்முறை விளக்கங்களை வீரர்கள் பார்வையிட்டனர்.

இந்திய கடற்படையின் மனிதநேய உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் குறித்து அறிந்துகொள்ள ஐஎன்எஸ் சுகன்யா கப்பலையும் அவர்கள் பார்வையிட்டனர்.

பயிற்சியின் இரண்டாம் நாளன்று இந்திய பாதுகாப்புப் படைகளின் சார்பில், கடல், தரை, வான்வெளி மூலம் மேற்கொள்ளப்படும் பேரிடர் நிவாரண திறன்கள் குறித்து செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டது. அவசர காலங்களின்போது கட்டளை, கட்டுப்பாட்டு மையங்களுக்கு உதவியாக அமையும் தரைவழி பேரிடர் மீட்பு ஏற்பாடுகள், தகவல் தொடர்பு உள்கட்டமைப்புகளை ஐஎன்எஸ் அடையார், சென்னையில் உள்ள தகவல் தொடர்பு கட்டமைப்பு மையம் ஆகியவை காட்சிப்படுத்தின.

Read the full e-paper

Translate »