சென்னை – 10 நவம்பர், 2026 புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படும் 1,364 மருந்துகளின் திருத்தியமைக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
மத்திய ரசாயனம், உரங்கள் துறை அமைச்சகத்தின் மருந்து உற்பத்தித் துறையின் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் 137 புற்றுநோய் தடுப்பு மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையின் வர்த்தக லாபத்தை நிர்ணயித்துள்ளது.
இது சுகாதாரம், குடும்பநல அமைச்சகத்தின் சுகாதார சேவைகள் தலைமை இயக்குநரகத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்குழு 2026 அக்டோபர் 17 அன்று பரிந்துரைகளை அளித்தது. அதனுடன் இந்த மருந்துகளுக்கான திருத்தியமைக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை 2026 நவம்பர் 9 முதல் (இன்று) அமலுக்கு வருகிறது.
2026 நவம்பர் 8 நிலவரப்படி 85 மருந்து உற்பத்தி நிறுவனங்கள் 121 வகை புற்றுநோய் தடுப்பு மருந்துகளைக் கொண்ட 1,364 மருந்து தயாரிப்புகளுக்கான திருத்தியமைக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைகளை சமர்ப்பித்துள்ளன. இவற்றில் 679 நிறுவனங்கள் 50 சதவீதத்திற்கும் மேல் விலையைக் குறைத்துள்ளன. அதிகபட்சமாக 96.45 சதவீதம் வரை அதிகபட்ச சில்லறை விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பின் மூலம் நுகர்வோரிடம் ஆண்டுக்கு ரூ.3,540.38 கோடி சேமிக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
