hello madras mobile banner 1200x300

பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி

சென்னை – 6 நவம்பர், 2026 ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில், இன்று ( 2026 நவம்பர் 5) காலை 11.10 மணியளவில், இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ, ‘ பிரளய்’ ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்தது.

இந்தச் சோதனையின் அனைத்து இலக்குகளும் முழுமையாக எட்டப்பட்டதாகவும், சோதனைத் தரவுகள் இதை உறுதிப்படுத்தியதாகவும் டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள இமாரத் ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட டிஆர்டிஓ ஆய்வகங்கள் இணைந்து உள்நாட்டிலேயே இந்த ஏவுகணையை உருவாக்கின. பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் இதன் தயாரிப்புப் பணியை மேற்கொண்டது.

ராணுவத்தின் பயன்பாட்டு மதிப்பீட்டுச் சோதனையின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்தச் சோதனையில், டிஆர்டிஓ, பாதுகாப்புப் படைகள், தொழில்துறை பிரதிநிதிகள் பங்கேற்றனர். வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏவுகணையை பாதுகாப்புப் படையில் விரைவில் இணைக்கப்பட உள்ளது.

இந்த சோதனை வெற்றிக்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புப் படைகளுக்கும், சம்பந்தப்பட்ட குழுவினருக்கும் பாராட்டுத் தெரிவித்துள்ளார். அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்திய படைகளின் தொழில்நுட்பத் திறனையும் செயல்பாட்டுத் தயார்நிலையையும் பிரளய் ஏவுகணை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார். பாதுகாப்புத் துறைச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங்கும் சம்பந்தப்பட்ட குழுவுக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

Read the full e-paper

Translate »