hello madras mobile banner 1200x300

மத்திய அரசின் மறுவாழ்வு மையத்தால் புதுவாழ்வு பெற்ற உத்தரப்பிரதேச இளைஞர்

சென்னை – 6 நவம்பர், 2026 உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூரைச் சேர்ந்த 23 வயது அமித் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), போதைப் பழக்கத்தால் உடல்நலம், குடும்ப உறவுகள், வேலை, பொருளாதார நிலை செழிப்பு ஆகியவற்றை இழந்து தவித்தார்.

2025 மே 30- ம் தேதி, மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சுல்தான்பூர் மாவட்ட போதைப் பொருள் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்குச் சேர்ந்தார்.

அங்கு மருத்துவச் சிகிச்சை, மருந்துகள், தங்குமிடம், சத்தான உணவு, மனநல ஆலோசனை, யோகா, வேலைவாய்ப்புப் பயிற்சி உள்ளிட்ட உதவிகள் அவருக்கு வழங்கப்பட்டன.

தொடர் சிகிச்சையாலும், ஊக்கத்தாலும் போதைப் பழக்கத்திலிருந்து படிப்படியாக மீண்ட அமித், தற்போது மீண்டும் வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டுகிறார். குடும்பத்தினருடனும் சமூகத்தினருடனும் இப்போது நல்ல உறவைப் பேணி வருகிறார்.

முறையான சிகிச்சையும் மறுவாழ்வு உதவிகளும் போதைப் பழக்கத்திலிருந்து மீண்டு சுயமரியாதையுடன் வாழ வழிவகுக்கும் என்பதற்கு அமித்தின் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டாகும்.

Read the full e-paper

Translate »