சென்னை – 3 நவம்பர், 2026 கோவை: இந்தியாவின் பாரம்பரியமிக்க நகை நிறுவனமான விபிஜே (வும்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ்), கோவையின் 100 அடி சாலையில் 21,000 சதுர அடி பரப்பளவில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய நகைக்கடையைத் திறந்துள்ளது. மூன்று தளங்களைக் கொண்ட இந்தப் புதிய நகைக்கடை, சென்னைக்கு வெளியே நிறுவனத்தின் வர்த்தக விரிவாக்கத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
126 ஆண்டுகால பாரம்பரியத்தைக் கொண்ட விபிஜே, சொந்த வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் திறனுடன் பல்வேறு தனித்துவமான நகைத் தொகுப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது. புதிய நகைக்கடையின் தரைத்தளத்தில் தங்கம், விலைமதிப்புமிக்க கற்கள் பதித்த நகைகள் மற்றும் ஜடாவ் நகைகளும், முதல் தளத்தில் வைரம், சாலிடேர் மற்றும் பிளாட்டினம் நகைகளும் இடம்பெற்றுள்ளன. கோவையில் முதன்முறையாக, அமெரிக்காவின் ஜெமாலஜிக்கல் இன்ஸ்டிடியூட் (GIA) சான்றளித்த வைர நகைகளையும் வாடிக்கையாளர்கள் இங்கு வாங்கலாம். வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கான தளமும், பிரத்யேக சொகுசு நகைப் பிரிவான 'Atelier by VBJ'-யும் விரைவில் திறக்கப்பட உள்ளன.
இதுகுறித்து நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரர்கள் அமரேந்திரன் வும்மிடி மற்றும் ஜிதேந்திரா வும்மிடி கூறுகையில், கோவையின் வர்த்தக வளர்ச்சியும், தரமான நகைகள் மீதான மக்களின் ஆர்வமும் இந்த விரிவாக்கத்திற்குக் காரணம் என்றும், திருமண நகைகள் முதல் வைர நகைகள் வரை விரிவான தேர்வுகளை ஒரே இடத்தில் வழங்குவதே நோக்கம் என்றும் தெரிவித்தனர்.
விழாவையொட்டி, தங்கம், வைரம், பிளாட்டினம் மற்றும் விலைமதிப்புமிக்க கற்கள் பதித்த நகைகளுக்கு சேதாரக் கட்டணம் மற்றும் மதிப்புக் கூட்டுதல் கட்டணத்தில் 20 சதவீதமும், வெள்ளி நகைகளுக்கு 10 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பழைய தங்கத்தை மாற்றும்போது கிராமுக்கு கூடுதலாக ரூ.125 வழங்கப்படுகிறது. மேலும், ரூ.1 லட்சம் பரிசுப் போட்டியும் நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் அமெரிக்காவில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ள விபிஜே, 2027–28 நிதியாண்டிற்குள் ரூ.5,000 கோடிக்கும் அதிகமான வருவாயை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை உருவாக்கிய பெருமையையும் கொண்டுள்ள இந்நிறுவனம், தனது 126 ஆண்டுகால பாரம்பரியத்தையும் கைவினைத் திறனையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
