hello madras mobile banner 1200x300

மீளுருவாக்க மருத்துவ ஆராய்ச்சிக்காக QR678® நிறுவனத்துக்கு சர்வதேச அங்கீகாரம்

சென்னை – 3 நவம்பர், 2026 சென்னை: இந்தியாவில் உருவான முடி அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் தளமான QR678®, முடி அறிவியல் மற்றும் மீளுருவாக்க மருத்துவத் துறையில் முன்னோடி கண்டுபிடிப்புகளுக்காக வழங்கப்படும் மதிப்புமிக்க DASIL விருதைப் பெற்றுள்ளது. கேரள மாநிலம் கொச்சியில், அக்டோபர் 22 முதல் 24 வரை நடைபெற்ற 14-வது DASIL உலக மாநாட்டில் இந்த விருது வழங்கப்பட்டது.

தோல் மருத்துவம் மற்றும் அழகியல் அறுவை சிகிச்சைக்கான சர்வதேசக் கூட்டமைப்பான DASIL சார்பில் வழங்கப்பட்ட இந்த விருது, முடி அறிவியல், மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மீளுருவாக்க மருத்துவத் துறைகளில் QR678® ஆற்றிவரும் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. QR678® நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் இந்திரஜித் தத்தா, அந்நிறுவனத்தின் அறிவியல், மருத்துவம் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன் இணைந்து இந்த விருதைப் பெற்றுக்கொண்டார்.

மருத்துவ விஞ்ஞானிகளான டாக்டர் ரிங்கி கபூர் மற்றும் டாக்டர் தேப்ராஜ் ஷோம் ஆகியோரின் வழிகாட்டுதலில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட QR678® தளம், முடி மற்றும் உச்சந்தலை ஆரோக்கியம் குறித்த மேம்பட்ட புரிதலை உருவாக்கும் நோக்கில் மருத்துவ ஆராய்ச்சி, மூலக்கூறு உயிரியல், உயிரித் தொழில்நுட்பம் மற்றும் மீளுருவாக்க மருத்துவம் ஆகிய துறைகளை ஒருங்கிணைக்கிறது.

இந்த அங்கீகாரம் குறித்துப் பேசிய இந்திரஜித் தத்தா, இந்த விருது விஞ்ஞானிகள், மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த அங்கீகாரம் என்றும், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தில் தொடர்ந்து முதலீடு செய்வதற்கான ஊக்கமாக இது அமையும் என்றும் தெரிவித்தார்.

2026-ஆம் ஆண்டில் மட்டும் QR678® ஆராய்ச்சியாளர்கள் 19 அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் பணியை நிறைவு செய்ததுடன், ஒரு காப்புரிமையையும் பெற்றுள்ளனர். இத்தளத்தின் அறிவுசார் சொத்துரிமைக் காப்புரிமைப் பட்டியலில் மூன்று சர்வதேசக் காப்புரிமைகள் இடம்பெற்றுள்ளன. மேலும், உலகளவில் 25 காப்புரிமை விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.

இதுவரை 36-க்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வுக் கட்டுரைகள், 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் தயாரிப்புகளுக்கான ஒப்புதல்கள், 5,000-க்கும் மேற்பட்ட மருத்துவர்களைக் கொண்ட வலையமைப்பு மற்றும் 1.5 லட்சத்துக்கும் அதிகமான நோயாளிகளுடனான தொடர்பு ஆகியவற்றின் மூலம், முடி அறிவியல் மற்றும் மீளுருவாக்க மருத்துவத் துறையில் தனது சர்வதேசச் செயல்பாடுகளை QR678® தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.

Read the full e-paper

Translate »