hello madras mobile banner 1200x300

மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சகம், அதன் பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவை, நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதற்கான சிறப்பு முகாம் 6.0-ஐ நிறைவு செய்துள்ளன

சென்னை – 3 நவம்பர், 2026 மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சகம், அதன் கீழ் இயங்கும் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவை, நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிப்பதற்கான சிறப்பு இயக்கம் 6.0- ஐ வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளன.

இந்த ஆண்டு, தூய்மையைப் பேணுதல், நிலுவையில் உள்ள பணிகளைக் குறைத்தல், பணியிட மேலாண்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றுடன், மின்னணுக் கழிவுகளை முறையாகச் சேகரித்தல், வகைப்படுத்துதல், அகற்றுதல் ஆகியவற்றிற்கு இந்த இயக்கம் கூடுதல் முக்கியத்துவம் அளித்தது.

2026- ம் ஆண்டு அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை நடைபெற்ற இந்த சிறப்பு இயக்கம் 6.0- ன் போது, பழைய கோப்புகள் ( காகித வடிவம் மற்றும் மின்னணு வடிவம் ) குறித்த விரிவான ஆய்வு, பயன்பாடற்ற பொருட்கள், பழைய இரும்புக் கழிவுகள், மின்னணுக் கழிவுகளைக் கண்டறிதல், அவற்றை முறையாக அகற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும்.

இத்தகைய செயல்பாடுகளின் நோக்கம், அலுவலக இடங்களை விடுவித்தல், ஆவண மேலாண்மையை மேம்படுத்துதல், தூய்மையான, நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட, திறமையான பணியிடச் சூழலை உருவாக்குதல் ஆகும்.

Read the full e-paper

Translate »