hello madras mobile banner 1200x300

குருக்ஷேத்திரத்தில் சுவாமி ஷ்ரத்தானந்த்தின் நினைவு நூற்றாண்டு நிகழ்வு – குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்பு

சென்னை – 2 நவம்பர், 2026 குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (நவம்பர் 1, 2026) ஹரியானாவின் குருஷேத்திரத்தில் சுவாமி ஷ்ரத்தானந்த்தின் தியாக நினைவு நூற்றாண்டு நிகழ்வில் (பலிதான் சதாப்தி சமரோ) பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், சுவாமி ஸ்ரத்தானந்த்தின் தியாகத்தின் 100-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக கூறினார். அவரது வாழ்க்கைப் பயணம் உத்வேகம் அளிப்பதாக குடியரசுத் தலைவர் கூறினார்.

சுவாமி ஸ்ரத்தானந்த் தமது வாழ்நாளை வேதங்களின் சேவைக்கும் சமூக மேம்பாட்டிற்கும் அர்ப்பணித்தார் என்று குடியரசுத் தலைவர் கூறினார். சமூக ஒற்றுமையின் வலுவான ஆதரவாளராக இருந்தார் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

தீண்டாமை எனும் களங்கத்தை ஒழிப்பதும், ஒடுக்கப்பட்ட மக்களை மேம்படுத்துவதும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கான மிக அத்தியாவசியமான படிகள் என்று சுவாமி ஸ்ரத்தானந்த் உறுதியாக நம்பினார் என குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.

சுவாமி ஸ்ரத்தானந்த் குருகுலக் கல்வி முறைக்குப் புத்துயிர் அளித்து அதை வலுப்படுத்தினார் என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். இது இந்தியக் கல்வி, கலாச்சாரத் துறைக்குப் புத்துயிர் அளித்தது என அவர் கூறினார்.

சுவாமி ஸ்ரத்தானந்த்தின் தியாக நூற்றாண்டு விழாவானது, அவரது எழுச்சியூட்டும் வாழ்க்கை, கல்வி, சமூகத் தத்துவம், தேசத்திற்கான அவரது அர்ப்பணிப்பு, தியாகம் ஆகியவற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக அமைகிறது என்று குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கூறினார்.

Read the full e-paper

Translate »