hello madras mobile banner 1200x300

பெரவள்ளூர் பகுதியில் கோவில் உண்டியல் பூட்டை உடைத்து, பணத்தை திருடிய நபர் கைது

சென்னை 29, அக்டோபர் 2026: சென்னை, பெரவள் ளூர், சக்திவேல் நகர் 2வது தெருவில் வசித்து வரும் அருமைநாதன், வ/35, என்பவர் பெரம்பூர், லோகோ ஓர்க்ஸ் சாலையிலுள்ள ஸ்ரீ நாகத்தம்மன் கோவிலில் செயலாள ராக உள்ளதாகவும், கடந்த 23.10.2026 அன்று இரவு, மேற்படி கோவிலை பூட்டி விட்டு, மறுநாள் (24.10. 2026) விடியற்காலை கோவிலை திறந்து பார்த்தபோது, கோவி லில் உள்ள உண்டிய லின் பூட்டு உடைக்கப் ப ட்டு உண்டியலில் இருந்த பணம் சுமார் ரூ.5,000/- திருடு போனது தெரியவந்த தாகவும், மேற்படி திருட்டில் ஈடுபட்ட நபரை கண்டுபிடித்து கோவில் உண்டியல் பணத்தை மீட்டு தரும் படியும், அருமைநாதன் என்பவர் கே-5 பெரவள்ளூர் காவல் நிலைய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற் கொண்டனர்.

கே-5 பெரவள்ளூர் காவல் நிலைய குற்றப் பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து, மேற்படி திருட்டில் ஈடுபட்ட எதிரி அப்பு, வ/25, வேம்பாக்கம் பள்ளம், பொன்னேரி, திருவள்ளூர் மாவட்டம் என்பவரை 26.10.2026 அன்று கைது செய்தனர்.

விசாரணையில் எதிரி அப்பு மீது ஏற்கனவே கும்மிடி பூண்டி இரயில்வே காவல் நிலையத்தில் 8 திருட்டு வழக்குகள் உட்பட சுமார் 11 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது.

கைது செய்யப் பட்ட எதிரி அப்பு விசாரணைக்குப் பின்னர் நேற்று முன் தினம் (27.10.2026) பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற ளுத்தரவுப்படி சிறையில் அடைக்கப் பட்டார்.

Read the full e-paper

Translate »