hello madras mobile banner 1200x300

இந்தியா – நெதர்லாந்து இடையே இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான உயர்நிலை கூட்டங்களில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டார்

சென்னை 28, அக்டோபர் 2026: மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தனது அரசு முறைப் பயணத்தின் தொடர்ச்சியாக 2026 அக்டோபர் 26 அன்று நெதர்லாந்தில் டச்சு அரசின் தலை வர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், டச்சு நிறுவனங்களின் முன்னணி பிரதிநிதி கள் ஆகியோருடன் தொடர்ச்சியான உயர் நிலைப் பேச்சுகளில் ஈடுபட்டார். இரு தரப்புப் பொருளா தார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், வர்த்தகம், முதலீட் டை வலுப்படுத்துதல், இந்திய – டச்சு நிறுவ னங்களுக்கு இடையே ஒத்துழைப்புக்கான பு திய வாய்ப்புகளைக் கண்டறிதல் ஆகிய வை குறித்து இந்தச் சந்திப்பின் போது கவனம் செலுத்தப் பட்டது.

நெதர்லாந்து நாட்டின் வெளிநாட்டு வர்த்தக, மேம்பாட்டு ஒத்துழைப்புத் துறை அமைச்சர் திரு ஜோயர்ட் ஜோயர் ட்ஸ்மா, பொருளாதார விவகாரங்கள், பருவ நிலை துறை அமைச்சர் திருமிகு ஹெலின் ஹெர்பர்ட் வடக்கு ஹாலந்து மாகாண ஆணையர் திரு ஆர்தர் வான் டைக் ஆகி யோரை திரு பியூஷ் கோயல் சந்தித்தார்.

டச்சு பிரதிநிதிகள் சபையின் வெளிநாட்டு வர்த்தக, மேம்பாட்டு ஒத்துழைப்புக் குழு, ஐரோப்பிய விவகாரங் களுக்கான செனட் குழு ஆகியோருடன் அமைச் சர் உரையாடினார். இச் சந்திப்புகள் இருதரப்புப் பொருளாதார உறவுகள், வர்த்தகம் மற்றும் முதலீடு, பரந்த அளவிலான இந்தியா – ஐரோப்பிய யூனியன் பொருளாதார நட்புறவு ஆகியவை தொடர் பாகக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியது.

திரு பியூஷ் கோயல், நெதர்லாந்து வர்த்தக, மேம்பாட்டு ஒத் துழைப்புத் துறை அமைச்சர் திரு ஜோயர்ட் ஜோயர் ட்ஸ்மா ஆகியோர் இணைந்து தலைமை தாங்கிய இந்தியா – நெதர்லாந்து வர்த்தகக் கூட்டமைப்பு இப் பயணத்தின் முக்கிய அம்சமாக அமைந்தது. இக்கூட்டத்தில் இந்திய, டச்சு வணிக முன்னணி பிரதிநிதிகள் உட்பட சுமார் 200 பேர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் இந்தியா – ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் ஏற்படும் சிறந்த வாய்ப்புகள், குறிப்பாக இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்துதல், முதலீட்டு நட்புறவு களை வலுப்படுத்துதல், சந்தை அணுகலை மேம்படுத்துதல் முக்கிய துறைகளில் ஒத்துழைப் பை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »