hello madras mobile banner 1200x300

அமித் ஷா குறித்த அவதூறு வழக்கு: ராகுல் காந்திக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது உத்தரப் பிரதேச நீதிமன்றம்

சென்னை 27, அக்டோபர் 2026: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறாக பேசியதாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட வழக் கை உத்தரப் பிரதேச சிறப்பு நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018-ல் கர்நாடக பேரவைத் « தர் தலையொட்டி பெங்களூரில் நடை பெற்ற பொதுக்கூட்டத் தில் பேசிய ராகுல் காந்தி, அப்போது பாஜக தேசியத் தலைவ ராக இருந்த அமித் ஷாவை அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக, உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள எம்பி மற்றும் எம்எல் ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக் கும் சிறப்பு நீதிமன்றத் தில், ராகுல் மீது பாஜக மூத்த தலைவர் விஜய் மிஸ்ரா அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் கடந்த 2023-ல் நீதிமன் றத்தில் நேரில் ஆஜராகி ராகுல் காந்தி ஜாமீன் பெற்றார். விசாரணை நிறை வடைந்த நிலையில், கடந்த அக். 13ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப் பளிக்கவிருந்தது. பின்னர், தீர்ப்பு வழங்கும் தேதி அக். 26க்கு ஒத்திவைக்கப் பட்டது. இதையடுத்து, சுல்தான்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று காலை நேரில் ஆஜராகியிருந்த நிலையில், அவருக்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »