சென்னை 27, அக்டோபர் 2026: தற்போது அர்னாப் புயல் கிழக்கு-மத்திய வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ளதாக புவனேஸ்வர் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரி வித்து உள்ளது. இது தொடர்பாக செய்தி யாளர்களிடம் பேசிய புவனேஸ்வர் ஐஎம்டி இயக்குநர் மனோரமா மொகந்தி, இன்று நள்ளிரவுக்குள் அர்னாப் கடுமையான புயலாக வும், நாளை மிகக் கடுமையான புயலாக வும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டார்.
இது ஆந்திரப் பிரதேச கடற்கரையை பாபட்லா மற்றும் விசாகப்பட்டினத்திற்கு இடையே, ஏனாம் அருகே, மணிக்கு 115- 125 கி.மீ வேகத்தில் வீசும் காற்றுடன் கடக்க வாய்ப்புள்ளதுதாகவும் தெரிவித்தார். இந்த புயல் கரையை கடக் கும் போது காற்றின் வேகம் மணிக்கு 140 கி.மீ வரை அதிகரிக்க கூடும். அக்டோபர் 27 மாலை முதல் ஒடிசா வில், குறிப்பாக பூரி, கஞ்சம், கஜபதி, ராய கடா மற்றும் கோரா புட் ஆகிய பகுதிகளில் கன முதல் மிகக் கன மான மழை பெய்யக் கூடும் என்றார்.
இதனிடையே அர்னாப் புயல் வங்காள விரிகுடாவில் ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வருவதால், நான்கு மாநிலங்கள் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆந்திரக் கடற்கரை யைத் தாக்குவதற்கு முன்பு படிப்படியாக மிகவும் கடுமையான புயலாக அர்னாப் வலுப்பெறும் என எதரிக்கப்பட்டுள்ளதால் ஆந்திரா, ஒடிசா, தெலங்கானா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநி லங்களுடன் புதுச்சேரி யும் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட் டுள்ளது.
மேலும் இம் மாநி லங்களில் அதிகாரிகள் ஆயத்தப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
