hello madras mobile banner 1200x300

தமிழகத்தின் நீர் உரிமைகளை பாதுகாப்பதில் மெத்தனமாக இருக்கும் தவெக அரசு.!! டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை 27, அக்டோபர் 2026: காவிரி, முல்லைப் பெரியாறு, கிருஷ்ணா, பாலாறு தண்ணீர் பிரச்சினைகளுக்காக டெல்லியில் குரல் கொடுக்க வேண்டிய காவிரி தொழில்நுட்பக் குழுமத்தின் துணைத் தலைவரை இதுவரை தவெக அரசு நியமிக்க வில்லை. இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந் துள்ளது. இந்த விவகா ரத்தில் தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித் துள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமிழகத்தின் நீர் உரிமைகளைப் பாதுகாப்பதில் தவெக அரசு மிகவும் மெத்தன மாக இருப்பதாக சாடி யுள்ளார்.

இது தொர்பான அறிக்கையில் அவரு கூறி உள்ளதாவது;

"காவிரி தொழில் நுட்பக் குழு மற்றும் மாநிலங்களுக்கு இடை யிலான நீர்வளப் பிரிவின் துணைத் தலைவர் பதவிக்கு, தகுதியும் அனுபவமும் வாய்ந்த நபரை நியமிப் பதற்கான அரசாணை ª வளி யிடப்பட்ட பின்னரும், உரிய நியமனத்தை மேற் கொள்ளாமல் காலம் தாழ்த்தி வரும் தவெக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்ட னத்திற்குரியது.

ஏற்கெனவே, காவிரி தொழில்நுட்பக் குழு வின் துணைத் தலைவ ராகப் பணியாற்றி வந்த பொறியாளர், கடந்த ஜூன் மாதமே தனது பணிக்காலத்தை நிறைவு செய்து ஓய்வுபெற்றுள்ள நிலையில், நான்கு மாதங்களுக்கு மேலாகி யும் அப்பதவிக்குத் தகுதியான நபரைத் தேர்வு செய்து நியமிக்க முடியாமல் இருப்பது, தவெக அரசின் நிர்வாகத் திறனை மட்டு மல்லாமல், தமிழக விவசாயிகளின் வாழ்வா தாரம் குறித்தும் கேள்வி களை எழுப்புகிறது.

காவிரி, முல்லைப் பெரியாறு, கிருஷ்ணா, பரம்பிக்குளம்-ஆழி யாறு உள்ளிட்ட நதிநீர் விவகாரங்களில் தமிழ கத்திற்குக் கிடைக்க வேண்டிய உரிய நீரைப் பெற்றுத் தருதல், தமிழ கத்திற்கு வரும் நீரின் அளவைத் தொடர்ந்து கண்கா ணித்தல், தொழில் நுட்பத் தரவு களை ஆய்வு செய்தல், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங் களில் பங்கேற்று தமிழ கத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகை யில் வலுவான வாதங் களை முன்வைத்தல் எனப் பல்வேறு முக்கியப் பணிகளை மேற்கொள்வதில் காவிரி தொழில்நுட்பக் குழுவின் துணைத் தலைவரின் பங்கு இன்றியமையாததாகும்.

காவிரி தொழில் நுட்பக் குழு மற்றும் மாநிலங்களுக்கு இடை யிலான நீர்வளப் பிரிவின் துணைத் தலைவர் பதவிக்குத் தகுதியான நபரைத் தேர்வு செய்து நியமிப் பதிலேயே இத்தகைய மெத்தனப்போக்கைக் கடைப்பிடிக்கும் தவெக அரசு, தமிழகத்திற்கான உரிமை நீரைப் பெற்றுத் தருவதில் எந்த அளவு க்கு அக்கறையுடன் செயல்படும் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழகத்தின் நீர் உரிமைகளைப் பாது காப்பதில் எவ்வித சமரசத்திற்கும் இட மளிக்காமல், கால தாமதமின்றி காவிரி தொழில்நுட்பக் குழு மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான நீர்வளப் பிரிவின் துணைத் தலைவர் பதவிக்குத் தகுதியும் அனுபவமும் வாய்ந்த நபரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும், ஏற்கெனவே அப்பதவிக் கான நியமனம் மேற் கொள்ளப்பட்டிருந்தால் அதன் விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்" என்று தவெக அரசை வலியுறுத்தி உள்ளார்.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »