சென்னை 27, அக்டோபர் 2026: ஒருவாரமாக மூடப் பட்டிருந்த ஈரானுட னான எல்லையை பாகிஸ்தான் மீண்டும் திறந்துள்ளது. இத னால் வணிகர்களும், பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்துள் ளனர். பாகிஸ்தான் தனது சமையல் எரிவாயு தேவையை பெரும்பாலும் இறக்கு மதி மூலமே பூர்த்தி செய்கிறது. குறிப்பாக ஈரானில் இருந்து நாள்தோறும் சுமார் 7,000 மெட்ரிக் டன் எல்பிஜியை இறக்கு மதி செய்கிறது.
இந்நிலையில், பா கிஸ்தானின் பலுசிஸ் தான் மாகாணம் குவாதர் மாவட்டத்தில் பாகிஸ்தான், ஈரான் இடையிலான காப்ட் – ரிம்தான் மற்றும் டஃப் தான் ஆகிய எல்லை சோதனை சாவடிகளை பாகிஸ்தான் அரசு கடந்த 17ம் தேதி மூடியது. இதற்கான அதிகாரப்பூர்வ கார ணத்தை பாகிஸ்தான் வெளியிடவில்லை என்றாலும், பாதுகாப்பு மற்றும் கடத்தல்களை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஈரானுடனான எல்லை மூடப்பட்ட தால் பாகிஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்ட துடன், சிலிண்டர் விலை ரூ.10,000 தாண்டியது. உணவு பொருள்களின் விலை யும் எகிறியதால் பொது மக்கள் கடும் அதிர்ச்சி யும், கவலையும் அடைந்தனர். இந்த சூழலில் கடந்த ஒருவார காலமாக மூடப்பட் டிருந்த காப்ட் ரிம்தான் மற்றும் டஃப்தான் ஆகிய எல்லைகளை நேற்று முன்தினம் முதல் பாகிஸ்தான் மீண்டும் திறந்தது.
இந்த தகவலை குவாதர் வர்த்தக சங்க தலைவர் மிர் நவீத் உறுதிப்படுத்தி உள்ளார். இந்த முடிவை வரவேற்றுள்ள மிர் நவீத் ஜான் கல்மதி, “எல்லை தாண்டிய வர்த்தகம், போக்குவரத்து மீண்டும் தொடங்கியிருப்பது இருபுறமும் சிக்கி தவித்த வணிகர்களுக் கும், பொது மக்களுக் கும் நிவாரணம் அளித் துள்ளது. நாடு தழுவிய எல்பிஜி பற்றாக்குறை யை தணித்து, எரிசக்தி மற்றும் உணவு பொருள் களின் விலையை குறைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது” என்றார்.
