சென்னை, 27 அக்டோபர் 2026: சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம் பாக்கம் ஏரியை முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் ஆய்வு செய்கிறார்.
வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில் ஏரியின் நீர்மட்டம், நீர் வரத்து மற்றும் வெளி யேற்றம் ஆகியவற்றை ஆய்வு செய்ய முதலமைச்சர் திட்ட மிட்டுள்ளார். கனமழை பெய்யும் பட்சத்தில் ஏரிக்கு அதிக அளவில் நீர் வரக்கூடும் என்ப தால் அதை எதிர் கொள்வதற்கான முன் னேற்பாடுகள் குறித்தும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். செம்பரம் பாக்கம் ஏரியில் இன்று காலை 8 மணி நிலவரப்படி ஏரியின் ª மாத்த கொள்ளள வான 3645 டிஎம்சி அடியில், தற்போது 1488 டிஎம்சி அடி நீர் இருப்பு உள்ளது. இது ஏரியின் மொத்த கொள்ளளவில் சுமார் 41 சதவீதமாகும். ஏரிக்கு விநாடிக்கு 150 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 208 கனஅடி நீர் வெளி யேற்றப்பட்டு வந்தது. இதுதவிர, தொழிற் சாலை மற்றும் பாசனத் தேவைகளுக்கும் குறைந்த அளவில் நீர் வழங்கப்படுகிறது. முதல்வரின் ஆய்வின் போது, நீர்வளத்துறை மற்றும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள் ஏரியின் தற்போதைய நீர் இருப்பு, நீர் வரத்து மற்றும் வெளியேற்றம் குறித்து விளக்கமளிக்க உள்ளனர். மேலும், ஏரியின் கரைகள், மதகு கள் மற்றும் வெள்ளத் தடுப்பு கட்டமைப்பு களை முதல்வர் ஆய்வு செய்ய உள்ளார். கனமழையின் போது வெள்ளப் பெருக்கு ஏற்படாமல் தடுப்பதற் கான முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்ளவும், சென்னை யில் குடிநீர் விநியோகம் தடையின்றி நடைபெறு வதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்த உள்ளார்.
வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்து வருவதால், செம்பரம் பாக்கம் ஏரியின் சிர் மட்டத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்கா ணித்து வருகின்றனர். வரும் நாட்களில் கனமழை பெய்தால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ள தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.
