சென்னை 25, அக்டோபர் 2026: அஜர்பைஜான் சென்றுள்ள ஒன்றிய அமைச்சர் ஜெய் சங்கர், நேற்று அந் நாட்டு அதிபரை சந்தித்து பேச்சுவார்த் தை நடத்தினார். இந்தியா, அஜர்பை ஜான் இடையேயான உறவுகளில் வர்த்தகம், சுற்றுலா, கலாச்சாரம் உள்ளிட்டவை முக்கியத்துவம் பெற் றுள்ளன. இந்தியாவில் இருந்து அஜர்பைஜா னுக்கு அரிசி, மருந்து கள், மின்னணு பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதேபோல் அ ஜர்பைஜானில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களில் கச்சா எண்ணெய் முக்கிய மானது. இந்நிலையில் ஒன்றிய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய் சங்கர் நேற்று அஜர் பைஜான் நாட்டுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் இந்திய வெளியுறவு அமைச்சர் அஜர்பைஜா னுக்கு மேற்கொள்ளும் முதல் இரு தரப்பு பயணம் இதுவாகும்.
நேற்று காலை அஜர்பைஜான் சென் றடைந்த ஒன்றிய அமைச்சர் எஸ்.ஜெய் சங்கர், தலைநகர் பாகு வில், அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ்வை சந்தித்து பேசினார். இதுகுறித்து ஒன்றிய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தன் எக்ஸ் பதிவில், “நேற்று காலை பாகுவில் அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ்¬ வ சந்தித்ததில் மகிழச்சி.
அவருக்கு பிரதமர் மோடியின் Õ£ழ்த்து களை தெரிவித்தேன். இந்தியா, அஜர்பை ஜான் நாடுகளிடையே யான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து அதிபர் இல்ஹாம் அலியேவ் வுடன் விவாதித்தேன். இந்த கூட்டு முயற்சிக்கு அவர் தெரிவித்த நேர் மறையான எண்ணங் களை பாராட்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
