hello madras mobile banner 1200x300

வங்கக் கடலில் புயல்: 5 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை

சென்னை 25, அக்டோபர் 2026: வங்கக்கடலில் காற் றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது 26ந்தேதி புயலாக (அர்னாப்) வலுவடை ந்து, ஆந்திரா-ஒடிசா கடற்கரைப் பகுதி களை நோக்கி நகரும் என்றும், தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வும் வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. வங்கக்கட லில் புயல் உருவாக உள்ளதால் நாளை முதல் 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை யொட்டிய தென் தமிழக பகுதிகள் மற்றும் கேரள பகுதி களில் நிலவிய காற் றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை யொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவி வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து காணப்படுகிறது. இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக தென் கி ழக்கு மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று காலை மத்திய கிழக்கு மற்றும் அதனை யொட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகி யது. இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற்றது. இது தொடர்பாக, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்ப தாவது: தென் கிழக்கு வங்கக்கடல் பகுதி யில் நிலை கொண்டு உள்ள ஆழ்ந்த காற் றழுத்த தாழ்வு பகுதி; அதே பகுதியில் நீடித்து, இன்று காற் றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப் பெற்றுள்ளது என்றும், மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை ஆழ்ந்த காற் றழுத்த தாழ்வு மண்ட லமாக வலுப்பெறும் நிலையில் நாளை (26ந்தேதி) அர்னாப் சூறாவளி புயலாக மாறும் என்று தெரி வித்துள்ளது.

அதாவது தென் கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் அர்னாப் புயல் உருவாக வாய்ப்பு உள்ளது. ஆந்திரா – ஒடிசா கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகரும் என்றும், யூமிழ கத்தில் கனமழைபெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. இவற்றின் தாக்கத்தால் திருநெல் வேலி மற்றும் கன்னியா குமரி மாவட்டங்களில் அதிமிக கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப் பட்டுள்ளது. மேலும் கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும்.

ஈரோடு, சேலம், நாமக் கல், கரூர், திருச்சி ராப்பள்ளி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், பெரம்பலூர், அரிய லூர், திருவண்ணா மலை, வேலூர், ராணிப் பேட்டை, புதுக் கோட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக் குறிச்சி, நாகப்பட்டி னம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடு துறை, சிவகங்கை, சென்னை, செங்கல் பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ண கிரி, திருப்பத்தூர், தர்மபுரி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்திருந் தது குறிப்பிடத்தக்கது.

மீனவர்களுக்கு தடை இந்நிலையில் வங்கக் கடலில் புயல் உருவாக உள்ளதால் இன்று (25ந்தேதி) முதல் 5 நாட்களுக்கு (29ந்தேதி) மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை வியீக்கப்பட் டுள்ளது. இதன்படி மீன் பிடிக்க கடலுக்கு சென்ற அனைத்து வகை படகுகளும் இன்று இரவுக்குள் கரைக்கு திரும்ப மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »