சென்னை, 17 அக்டோபர் 2026: முதல்வர் விஜயின் கேரள பயணம் ரத்து செய்யப்பட்டது. கோவை மற்றும் கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஹெலிகாப்டரில் செல்ல அனுமதி கிடைக்க வில்லை.
கோவையில் ரூ.300 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட பெரியார் அறிவுலகத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்தார். நூலகத்தின் முகப்பு பகுதியில் உள்ள பெரியார் சிலை மற்றும் பெரியார் அறிவுலகம் கல்வெட்டை திறந்து வைத்தார். கோவையில் பு திய திட்டப்பணி களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்ட பணிகளை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். கோவையில் ரூ.32.32 கோடி மதிப்பில் 144 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டினார். ரூ.34.72 கோடியில் 9,343 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டா வழங் கினார் முதல்வர் விஜய். வீடு இல்லாதவர்களுக்கு தலா 9 லட்சம் மதிப்பி லான வீடுகளை வழங்கி முதலமைச்சர் விஜய் சிறப்பித்தார். இந் நிலையில் இன்று கோவையில் விழா முடிந்ததும் மதியம் 2 மணியளவில், கேரளா விற்கு செல்ல முதலமைச்சர் விஜய் செல்ல திட்டமிட்டு இருந்தார்.
கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளம் செல்லத் திட்ட மிட்டிருந்த நிலையில், பலத்த மழையால் ஹெலிகாப்டர் சேவை பாதிக்கப்படலாம் என வானிலை மையம் தெரிவித்தது. இதனை யடுத்து, முதல்வர் விஜய்யின் கேரள பயணம் ரத்து செய்யப் பட்டது. கேரளாவின் திருச்சூரிலும் பரவலாக மழை பெய்து வருவ தாகவும் பலத்த காற்றும் வீச வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்தது. கனமழை காரணமாக முதல்வர் விஜயின் கேரள பயணம் ரத்து செய்யப்பட்டது.
