hello madras mobile banner 1200x300

“நடிகர் வித்யுத் ஜாம்வால் தல்சிம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார்” – ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ இயக்குநர் கிட்டாவ் சக்குராய்!

சென்னை 17, அக்டோபர் 2026: பாரமவுண்ட் பிக்சர்ஸ் மற்றும் லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித் துள்ள 'ஸ்ட்ரீட் ஃபைட் டர்' திரைப்படம், கேப்காம் நிறுவனத் தின் புகழ் பெற்ற வீடி யோ கேம் தொடரை முதன்முறை யாகப் பெரிய திரைக்குக் கொண்டு வந்துள்ளது. இந்தத் திரைப்படத்தில், உலகின் தலைசிறந்த போர் வீரர்களாக நடிக்க ஒரு நட்சத்திரப் பட்டாளமே இணைந் துள்ளது. இதில் மிகவும் பிரபலமான கதாபாத் திரங்களில் ஒன்று தல்சிம்.

இந்தியாவின் சிறந்த ஆக்ஷன் நடிகர்களில் ஒருவரான வித்யுத் ஜாம்வாலை, புகழ் பெற்ற கேமிங் கதாபாத் திரமான தல்சிமாகத் தேர்வு செய்தது குறித்து இயக்குநர் கிட்டாவ் சகுராய் மனம் திறந் துள்ளார். இந்த ஆக்ஷன் திரைப்படத் தி ன் மூலம் வித்யுத் ஜாம்வால் ஹாலிவுட் டில் அறிமுகமாகிறார். தற்காப்புக் கலைகளில் அவருக்குள்ள நிபுணத் துவத்தையும், தல்சிம் கதாபாத்திரத்துடன் அவருக்கு இருக்கும் தனிப்பட்ட தொடர் பையும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடம் இந்த படம் கொண்டு சேர்க்கும்.

திரைப்படத்தில் தல்சிம் கதாபாத்திரத் தைச் சேர்ப்பது குறித்து படக்குழுவினருக்கு முதலில் சில தயக்கங் கள் இருந்தாலும், தல்சிம் இல்லாமல் ஸ்ட்ரீட் ஃபைட்டர் திரைப்படமே முழுமை யடையாது என்பதில் தான் உறுதியாக இருந்ததாக இயக்குநர் கூறுகிறார். ரசிகர்கள் உண்மையாகவே ரசித்துக் கொண்டாடும் வகையில் அந்தக் கதா பாத்திரத்தைத் திரை யில் வெளிப்படுத்த வேண்டும் என்பதே தனது விருப்பமாக இருந்ததாகவும் அவர் தெரிவிக்கிறார்.

இந்தக் கதாபாத்திரத் தில் வித்யுத் ஜாம்வால் நடிக்க ஒப்பந்தமானது புதிய பரிமாணத்தை அளித்ததாக இயக்குநர் குறிப்பிட்டார். தல்சிமின் பூர்வீகப் பின்னணியையும், அவரது தோற்றம் மற்றும் கதையின் அடிப்படையையும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் எடுத்துச் செல்ல இந்த வாய்ப்பைப் பயன் படுத்த விரும்புவதாக வித்யுத் தெரிவித்ததை யும் அவர் இங்கு குறிப்பிடுகிறார்.

மேலும் இயக்குநர் பகிர்ந்து கொண்ட தாவது, "தல்சிம் கதா பாத்திரத்தை வித்யுத் முழுமையாகத் தன் வசப்படுத்திக் கொண் டுள்ளார். அந்தக் கதா பாத்திரத்துக்கு அவர் நியாயம் சேர்த்துள்ளார் என்பதை ரசிகர்கள் திரையில் பார்ப்பார் கள்" என்றார்.

பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஸ்ட்ரீட் ஃபைட்டர் திரைப்படம் தற்போது இந்தியா முழுவதும் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரை யரங்குகளில் வெளி யாகியுள்ளது. விறு விறுப்பான சண்டைக் காட்சிகளும், பொழுது போக்கு அம்சங்களும் நிறைந்த இந்தப் பிரம் மாண்டத் திரைப்படத் தைக் காண இப்போதே உங்கள் டிக்கெட்டு களை முன் பதிவு செய்யுங்கள்!

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »