சென்னை 17, அக்டோபர் 2026: நேற்று (16ந் தேதி) விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாள். இதை முன்னிட்டு அவருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் புகழ் வணக்கம் செலுத்தியுள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: ‘‘ஆங்கிலேய ஆட்சியின் அ டக்குமுறைக்கு அடி பணியாமல், தாய்மண் ணின் உரிமைக்காகவும், சுயமரியாதைக்காகவும் இறுதிவரை போராடிய விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளில், அவரது தியாகத்தைப் போற்றி வணங்கு கிறேன்! அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக் கும் துணிவும், உரிமை களைக் காக்கும் உறுதி யும், தாய்மண்ணைப் போற்றும் உணர்வும் ஒவ்வொருவரிடமும் வளர வேண்டும் என்ப தற்கு அவரது வாழ்க் கை, வரலாற்றுப் பாட மாகத் திகழ்கிறது. மிர பாண்டிய கட்டபொம் மனின் தியாகமும், தீரமும் தமிழர் வரலாற் றில் என்றும் அழியாத பெருமையாக நிலைத் திருக்கும்!’’ இவ்வாறு முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.
