hello madras mobile banner 1200x300

தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பொறுப்பேற்றார்!

சென்னை 16, அக்டோபர் 2026: தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பொறுப் பேற்று கொண்டார்.

கடந்த 6 மாதங் களாக தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக செயல்பட்டு வந்த அர்லேகர் இன்று தமிழகத்தின் முழு நேர ஆளுநராக பொறுப் பே ற்று கொண்டார்.

தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி மேற்கு வங்க ஆளுநராக கடந்த மார்ச் மாதம் மாற்றப்பட்டார்.

இதையடுத்து கேரள ஆளுநராக இருந்த ஆர்.வி. ஆர்லேகருக்கு தமிழகத்தின் ஆளுந ராகக் கூடுதல் பொறுப்பு அளிக்கப் பட்டது. இந்நிலையில், அவரை தமிழகத்தின் முழுநேர ஆளுநராக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்து உத்தரவிட் டுள்ளார்.

இதனையடுத்து தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ஆர்.வி. ஆர்லேகர் சென்னை ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »