hello madras mobile banner 1200x300

ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா விரும்புகிறது – பிரதமர் மோடி

சென்னை 16, அக்டோபர் 2026: ஆசிய விளையாட்டு போட்டி சமீபத்தில் ஜப்பானில் நடந்தது. இதில் 21 தங்கம்,27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கம் பெற்று நான்கா வது இடம் பிடித்தது. வில்வித்தை, மல்யுத்தம், குத்துச்சண்டை உள் ளிட்டவற்றில் பதக்கங் கள் கிடைத்தன. இந்திய வீரர்களுக்கு தலைவர் கள் பாராட்டு தெரிவித் தனர்.

கவுரவம் – பதக்கம் வென்ற வீரர்கள் அனைவரும் டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தனர். அவர்க ளுடன் பிரதமர் கலந் துரையாடியதுடன் கவுரவித்தார். பின்னர் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

சாதனை – அவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசிய தாவது: ஆசிய விளை யாட்டு போட்டி எப் போதும் நமது நினை வில் இருக்கும். நமது ஆண் கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணி தங்கம் வென்றது. 44 ஆண்டு களுக்கு பிறகு நமது பெண்கள் அணி தங்கப் பதக்கத்தை இந்தியா வுக்கு கொண்டு வந்தது. கிரிக்கெட்டில் ஆண் கள் மற்றும் பெண்கள் அணியும் தொடர்ச்சி யாக இரண்டாவது முறை பதக்கம் வென்று சாதனை படைத்தது. அதே போல் கபடியி லும் இரு அணிகளும் தங்கம் வென்றது. வில் வித்தையில் இந்தியா வுக்கு 5 தங்கம் கிடைத் தது. நமது தடகள வீரர்கள் புதிய சாதனை படைத்தனர் 28 ஆண்டு களுக்கு பிறகு பளு தூக்குதலில் நமக்கு பதக்கம் கிடைத்தது.

கேலோ இந்தியா திட்டத்தையும், விளை யாட்டு கூட்டமைப்பை வலுப்படுத்தவும் 36 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இன்று நாடு முழுவதும் கேலோ இந்தியா மையங்கள் திறக்கப்பட்டன. மைதானங்கள், மினி மைதானங்கள்,, விளை யாட்டு துறை சார்ந்த அரங்கங்கள் கட் டமைக்கப்பட்டன. தடகள டிராக்குகள், கால்பந்து மைதானங் கள், ஹாக்கி மைதானங் கள் மற்றும் நீச்சல் குளங்கள் ஆகியன கட்டமைக்கப்பட்டன.

ஒலிம்பிக் -வரவிருக் கும் விளையாட்டு போட்டிகளுக்கான நமது ஆயுத்தங்களை வலுப்படுத்த வேண் டும். 2028 ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக், 2030ம் ஆண்டு காமன் ªÕல்த் போட்டிகளை நடத்து வதோடு, 2036 ல் ஒலிம்பிக் போட்டி களை நடத்தவும் இந்தியா விரும்புகிறது. அதனை நடத்துவோம் என நம்புகிறோம். திறமைகளை கண் டறிந்து வளர்ப்பதற்காக ஒவ்வொரு கிராமத்தை யும் சென்றடைய முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு கிடைத்த வெற்றியானது, நாட் டின் மனப்பான்மை யை பிரதிபலிக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »