சென்னை – 16 நவம்பர், 2026 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ஸ்பெயின் நாட்டின் திரைத் துறைச் சிறப்பை வெளிப்படுத்தும் நான்கு திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், ஸ்பெயின் கௌரவ நாடாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, தற்கால ஸ்பெயின் திரைப்படங்களின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் நான்கு திரைப்படங்கள் சிறப்புத் தொகுப்பாகத் திரையிடப்பட உள்ளன.
1. பிட்டர் கிறிஸ்துமஸ் (Bitter Christmas): இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற இயக்குநர் பெட்ரோ அல்மோடோவரின் 2026-ம் ஆண்டு திரைப்படம் இது. சொந்த வாழ்க்கை அனுபவங்களைப் படமாக்குவதில் உள்ள சிக்கல்களை இது பேசுகிறது. கேன்ஸ், டொராண்டோ, சான் செபாஸ்டியன் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இப்படம், இந்தியாவில் முதன்முறையாகக் காட்சிப்படுத்தப்படுகிறது.
2. லுக்கிங் ஃபார் மைக்கேல் (Looking For Michael): ஜுவானா மாசியாஸ் இயக்கிய இப்படம், பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் கதையைச் சொல்கிறது. உலகிலேயே முதன்முறையாக இது இங்கு திரையிடப்படுகிறது.
3. தி பேட் சன் (The Bad Son): ஜெய்மே லோரெந்தே இயக்கிய முதல் திரைப்படம். குடும்ப உறவுகள், தலைமுறை தலைமுறையாகத் தொடரும் மனக்காயங்கள் ஆகியவற்றைப் பேசுகிறது. ஆசியாவில் முதன்முறையாக இது திரையிடப்படுகிறது.
4. டிரினிடாட் (Trinidad): லாரா அல்மேயா, ஜோஸ் ஓர்துனோ இயக்கிய 2025ம் ஆண்டு திரைப்படம். 19-ம் நூற்றாண்டில் வைல்டு வெஸ்ட் பகுதிக்குத் தப்பிச் செல்லும் ஸ்பானியப் பெண், பெண் கொள்ளையர்களுடன் இணைந்து ஆபத்துகளையும் பழிவாங்கலையும் எதிர்கொள்வதே கதை. உலகிலேயே முதன்முறையாக இது இந்த திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.
