கடந்த 04.12.2017 ஆம் தேதி இரவு, அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த நோமல்
கோகாய், ஆ/42/2017, த/பெ.பத்ரேஸ்வர் கோகாய் என்பவர் அண்ணா சாலை
ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை அருகே கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி
நடந்து, சாலையை கடந்து சென்ற போது அதே சாலையில் கேளம்பாக்கத்திலிருந்து
சென்ட்ரல் நோக்கி, தெற்கு வடக்காக சென்று கொண்டிருந்த ரூட் நம்பர்.221 என்ற
மாநகர பேருந்தின் ஓட்டுநர் சங்கரன், ஆ/வ.32/2017 த/பெ.ஏழுமலை என்பவர்
மேற்படி பாதசாரியின் மீது இடித்து விபத்து ஏற்படுத்தியதில் பாதசாரி நோமல்
கோகாய் என்பவர் சாலையில் விழுந்து முகம் மற்றும் தலையில் பலத்த காயம்
ஏற்பட்டு அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு
இராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில்
இருந்தவர் மறுநாள்(05.12.2017) சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். மேற்படி
விபத்து சம்மந்தமாக D-1 திருவல்லிக்கேணி போக்குவரத்து புலனாய்வு பிரிவு
(இதற்கு முன்பு D6 Anna Square TIW) வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் விசாரணை முடித்து, எழும்பூர் 6வது குற்றவியல் நடுவர்
நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை
நடைபெற்று வந்த நிலையில், இவ்வழக்கில் நீதிமன்ற விசாரணை முடிந்து
09.09.2026 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
எதிரியான மாநகர பேருந்து ஓட்டுநர் சங்கரன் என்பவர் மீது குற்றம்
நிரூபிக்கப்பட்டதால், உயிரிழப்புக்கு காரணமான சங்கரன் குற்றவாளியாக
அறிவிக்கப்பட்டு, 1 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.6,000/-
அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 15 நாட்கள் சிறை தண்டனை
விதித்து கனம் நீதிமன்ற நடுவர் அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.
