மு.க.ஸ்டாலினை இன்று (12.9.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் “திராவிட வெற்றிக் கழகத்தின்” தலைவர் மல்லை சத்யா தலைமையில் மாநில நிர்வாகிகள் நேரில் சந்தித்து, நடைபெறவிருக்கும் 2026 சட்டப்பேரவை இடைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு திராவிட வெற்றிக் கழகம் முழு ஆதரவு அளிப்பதாகவும், இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு திராவிட வெற்றிக் கழக நிர்வாகிகள் – தோழர்கள் முழுமையாக பாடுபடுவார்கள் என தெரிவித்தனர்.
