hello madras mobile banner 1200x300

ஹார்முஸ் ஜலசந்தியில் 27 இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பல் மீது கண்ணிவெடி தாக்குதல்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதால் பதற்றம்

சென்னை – 1 நவம்பர், 2026 ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி மாதம் மோதல் வெடித்ததில் இருந்தே, ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறுவதாக கூறி வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சூழலில், கடந்த 2017ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வரும் லிம்பெட் கண்ணிவெடி தாக்குதல் தற்போதைய மோதலுக்குப் பிறகு இப்போதுதான் முதல்முறையாக நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஓமனின் கசாப் பகுதியில் இருந்து 46 கி.மீட்டர் தொலைவில் பனாமா நாட்டின் கொடியுடன் 27 இந்திய மாலுமிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ‘எம்டி லூயிஸ் 1’ என்ற கச்சா எண்ணெய் டேங்கர் கப்பலின் அடிப்பகுதியில், ஒரு சிறிய படகில் வந்த மர்ம நபர்கள் 2 லிம்பெட் கண்ணிவெடிகளை இணைத்துவிட்டு தப்பினர். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் கப்பலின் இன்ஜின் அறையில் தீப்பிடித்து கப்பல் தற்காலிகமாக செயலிழந்த போதிலும், இந்திய ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பாதிப்பு ஏதுமின்றி கப்பல் தொடர்ந்து தனது பயணத்தை மேற்கொண்டுள்ளது.

Read the full e-paper

Translate »