hello madras mobile banner 1200x300

வருஷ நாட்டில் கஞ்சா விற்பனை செய்த இருவர் குண்டர் சட்டத்தில் கைது

வருஷநாடு செப்டம்பர் 10: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியம் சிங்கராஜபுரம் ஊராட்சி சிங்கராஜபுரம் இந்திரா நகரைச் சேர்ந்த ராமர் மகன் சின்னச்சாமி என்ற சின்ன வயது 40 என்பவரும் வருஷநாடு ஊராட்சி வைகை நகர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா மகன் மணிகண்டன் வயது 40 என்பவரும் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளனர் இவர்களை வருஷநாடு காவல்துறையினர் கைது செய்தனர் மீண்டும் அதே தொழிலை செய்து வந்ததால் கடமலைக்குண்டு ஆய்வாளர் குமரேசன் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு கொடுத்த தகவலின் பேரில் தேனி மாவட்ட எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ் பரிந்துரையின் பேரில் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »