சென்னை, புளியந்தோப்பு, வ.உ.சி.நகர் பகுதியில் வசித்து வரும்
நிஷார்கான், வ/29, த.பெ.கலந்தர்கான் என்பவர் தனியார் IT நிறுவனத்தில் வேலை
செய்து வருவதாகவும், இவர் நேற்று முன்தினம் (04.09.2026) நள்ளிரவு அவரது
இருசக்கர வாகனத்தில் அவரது அண்ணனின் காரை நிறுத்துவதற்கு இடம்
உள்ளதா என பார்த்து கொண்டு போகும்போது, வழியில் புளியந்தோப்பு,
வ.உ.சி.நகர் 7வது தெரு அருகே அங்கு நின்று கொண்டிருந்த அடையாளம்
தெரியாத நபர் நிஷார்கானை வழிமறித்து வீண்தகராறு செய்து தகாத
வார்த்தைகளால் பேசியும், அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து
தாக்கியும், இருசக்கர வாகனத்தை சேதப்படுத்திவிட்டு அருகில் இருந்த
2 கார்களையும் சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து
தப்பிச்சென்றதாகவும், தாக்குதலில் காயமடைந்த நிஷார்கான் தனியார்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் மேற்படி சம்பவம் குறித்து
P-1 புளியந்தோப்பு காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது போலீசார்
வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
P-1 புளியந்தோப்பு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்
குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து, மேற்படி குற்ற சம்பவத்தில்
ஈடுபட்ட எதிரி அருள்முருகன், வ/22, பி.எஸ்.முர்த்தி நகர், புளியந்தோப்பு,
சென்னை என்பவரை நேற்று (05.09.2026) கைது செய்தனர். அவரிடமிருந்து
கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட எதிரி அருள்முருகன் விசாரணைக்குப் பின்னர்
நேற்று (05.09.2026) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி
சிறையில் அடைக்கப்பட்டார்.
