சென்னை 25, அக்டோபர் 2026: அருணாசல பிரதேசத் தின் எல்லைப் பகுதி களில் சீனப் படை களுடன் தொடர்ந்து நேருக்கு நேர் மோதல் கள் ஏற்பட்டு வருவதாக இந்தோ-திபெத் எல்லைக் காவல் படைத் தலைவர் சத்ரு ஜீத் கபூர் தெரிவித் துள்ளார்.
இதையடுத்து, எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகை யில் அனைத்து எல்லை பகுதிகளிலும் ஆளில்லா விமானப் படைப் பிரிவுகள் அமைக்கப் பட்டுள்ளதாகவும், கல்வான் போன்ற மே £தல்களை எதிர் கொள்ளும் வகையில் புதிய பயிற்சித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ள தாகவும் அவர் கூறி யுள்ளார்.
இந்தநிலையில், டெல்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறிய தாவது: இந்தியா – சீனா எல்லைப் பகுதிகளில் சீனப் படைகள் வழக்க மான ரோந்துப் பாதை களிலிருந்து விலகும் போது நிலைமை அவ்வப்போது பாதிக் கப்படுகிறது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும், தவறான புரிதல்கள் மற்றும் தவறான கணிப்புகளைத் தவிர்க்கவும் இரு நாடு களும் ஏற்கெனவே உள்ள ராஜீய மற்றும் ராணுவ வழிமுறை களைப் பயன்படுத்தி வருகின்றன.
எல்லை நிர்வாகத் தை மேம்படுத்தும் வகையில், சில பகுதி களில் எல்லைக் கட்டுப் பாட்டுக் கோடு குறித்த புரிதலை மேம்படுத்து வது தொடர்பாகவும் இரு நாடுகளும் விவா திக்க ஒப்புக் கொண் டுள்ளன. எல்லைப் பகுதிகளில் அமைதி யைப் பராமரிப்பது இருதரப்பு உறவுகளின் ஒட்டு மொத்த வளர்ச் சிக்கு அவசியமாகும். இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.
