hello madras mobile banner 1200x300

ரோபோடிக் தொழில்நுட்பத்துடன் பக்கவாத மறுவாழ்வு சிகிச்சை: ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை புதிய முயற்சி!

சென்னை – 12 நவம்பர், 2026 பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான மறுவாழ்வு சிகிச்சையில், நவீன ரோபோடிக் மற்றும் நரம்புத் தூண்டுதல் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை.

இதன் மூலம், நோயாளிகளுக்கு பல்வேறு வகையான தொடர் பயிற்சிகள் மற்றும் எதிர்ப்பு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை ஒவ்வொரு நபரின் தேவைகளுக்கு ஏற்ப திட்டமிட்ட முறையில் வழங்கி, நோயாளிகள் மீண்டும் சுயமாக தங்கள் அன்றாட செயல்பாடுகளை தாங்களே செய்யும் வாய்ப்புகளை அதிகரிக்க முடியும்.

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரோபோடிக் தொழிநுட்பத்தில் முக்கியமான அமைப்புகளில் ஒன்று ‘மல்டிலிம்ப் ஐசோகினெடிக்’ ரோபோடிக் மறுவாழ்வு அமைப்பு ஆகும். இந்த அமைப்பு, கைகள் மற்றும் கால்கள் இரண்டிற்கும், முக்கிய மூட்டு பயிற்சிகள் உட்பட 20-க்கும் மேற்பட்ட பயிற்சி முறைகளை நோயாளிகள் மேற்கொள்ள உதவுகிறது. ஒவ்வொரு நோயாளியின் மறுவாழ்வுத் தேவைக்கு ஏற்ப மறுவாழ்வு குழுவின் உதவியோடு பயிற்சி முறை மற்றும் பயிற்சி அளவை மாற்றியமைக்க முடியும்.

இந்த ரோபோடிக் அமைப்பின் மூலம் அன்றாட வாழ்க்கைச் செயல்பாடுகளுக்கான பிரத்யேக பயிற்சிகளையும் மறுவாழ்வின் பல்வேறு கட்டங்களில் இருக்கும் நோயாளிகளுக்கு ஏற்ற வகையில் வழங்க முடியும்.

கை மற்றும் விரல் இயக்கங்களில் சிரமத்தை எதிர்கொள்பவர்களுக்காக, ரோபோடிக் கையுறைகளும் இந்த அமைப்பில் உள்ளன. அவற்றின் துணையுடன் கைகளைத் திறத்தல், மூடுதல் மற்றும் விரல் இயக்கப் பயிற்சிகளை நோயாளிகள் மேற்கொள்ளலாம். இந்த வசதி தொடர்ச்சியான கை இயக்கப் பயிற்சிகள் செய்வதை எளிதாக்குகிறது.

அனைத்து ரோபோடிக் மறுவாழ்வுத் தொழில்நுட்பங்களும் பிசியோதெரபி மற்றும் பிற மறுவாழ்வு சிகிச்சை நிபுணர்களின் பணிகளுக்கு உதவியாக அமைகிறது.

பக்கவாத சிகிச்சையில் மறுவாழ்வின் முக்கியத்துவம் குறித்து, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை பக்கவாத மருத்துவப் பிரிவின் மூத்த ஆலோசகர் டாக்டர் சிவராஜன் தண்டேஸ்வரன் கூறுகையில், “பக்கவாத சிகிச்சை என்பது ஆரம்பக்கட்ட மருத்துவ சேவையுடன் முடிவடைந்து விடுவதில்லை. அன்றாட வாழ்வை மேற்கொள்வதில் அவர்களுக்கு ஏற்படும் உடல் இயக்க சவால்களுக்கு தீர்வு அளிக்கும் மறுவாழ்வு பயிற்சிகளும் முக்கியம். இதற்கு தொடர்ச்சியான ஒருங்கிணைக்கப்பட்ட பிரத்யேக உடல் இயக்க பயிற்சிகள் தேவைப்படுகிறது. இதற்கு ரோபோடிக் மறுவாழ்வு அமைப்புகள் பெரிதும் உதவுகின்றன. இது நோயாளிகளுக்குத் தனிப்பட்ட மறுவாழ்வுத் திட்டங்களை வழங்க உதவுகிறது. இதன் மூலம் நோயாளிகள் உடல் இயக்கங்களை மீண்டும் பெற்று சுயசார்போடு வாழ முடிகிறது,” என்றார்.

காவேரி மருத்துவமனை குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், “மருத்துவம் என்பது ஒரு உடல் உபாதைக்கு சிகிச்சையளிப்பதுடன் நின்றுவிடாமல், நோயாளிகள் குணமடையும் முழுப் பயணத்திலும் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக இருக்க வேண்டும். பக்கவாதம் ஒரு நபரின் இயக்கம், சுயசார்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தை வெகுவாக பாதிக்கலாம். ரோபோடிக் மறுவாழ்வு மற்றும் நரம்புத் தூண்டுதல் தொழில்நுட்பங்களைக் அறிமுகப்படுத்துவதன் மூலம், விரிவான பக்கவாத மறுவாழ்வு சேவைகளை வழங்க நாங்கள் முற்பட்டுள்ளோம். நோயாளிகள் குணமடையும் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களுக்கு ஆதரவளிக்க, மருத்துவ நிபுணத்துவம், தகுந்த தொழில்நுட்பம் மற்றும் பரிவான சேவை ஆகியவற்றை ஒன்றிணைப்பதே எங்கள் நோக்கமாகும்,” என்றார்.

Read the full e-paper

Translate »