சென்னை – 12 நவம்பர், 2026 சென்னை: இந்தியாவின் தொழில்நுட்ப அடிப்படையிலான நிலையான வருவாய் முதலீட்டுத் தளமான பாண்ட்பஜார் (Bondbazaar), தனது நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலராக (CEO) எஸ். சம்பத் குமாரை நியமித்துள்ளதாக இன்று அறிவித்துள்ளது. நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அவர் தலைமை தாங்கவுள்ளார். டிஜிட்டல் முதலீட்டுக் கட்டமைப்பை வலுப்படுத்துதல், விநியோக வலையமைப்பை விரிவுபடுத்துதல், இந்தியா முழுவதும் உள்ள சில்லறை முதலீட்டாளர்கள் நிலையான வருவாய் முதலீடுகளை எளிதில் மேற்கொள்ள வழிவகுத்தல் ஆகியவற்றில் அவர் முக்கியக் கவனம் செலுத்துவார்.
நிதிச் சேவைகள், வணிக மேம்பாடு, முதலீட்டுப் பொருள் உத்திகள் மற்றும் விநியோக மேலாண்மை ஆகிய துறைகளில் சம்பத் குமார் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர். இதற்கு முன்பு எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தில் விநியோகப் பிரிவின் தலைமை அலுவலராகப் பணியாற்றிய அவர், நிறுவனத்தின் விநியோக வலையமைப்பை விரிவுபடுத்தும் நோக்கில் பல்வேறு முதலீட்டுத் தயாரிப்புத் திட்டங்களை முன்னெடுத்தார். இதற்கு முன்பு ரிலையன்ஸ் கேப்பிட்டல் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் வணிக மேம்பாட்டுப் பிரிவின் தலைவராகப் பணியாற்றியதுடன், ஸ்பார்க் கேப்பிட்டல் நிறுவனத்துடனும் தொடர்பில் இருந்துள்ளார்.
இந்தியாவின் டிஜிட்டல் முதலீட்டுச் சூழல் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் நிலையில், நிலையான வருவாய் முதலீட்டுச் சந்தையில் சில்லறை முதலீட்டாளர்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் உருவாகி வருகின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், அரசு மற்றும் பெருநிறுவனங்கள் வெளியிடும் பத்திரங்களில் சில்லறை முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் வசதியை பாண்ட்பஜார் தனது தொழில்நுட்ப அடிப்படையிலான தளத்தின் மூலம் வழங்குகிறது. வெளிப்படையான சந்தை சார்ந்த விலை நிர்ணயம், நிகழ்நேரத்தில் பத்திரங்களை வாங்கவும் விற்கவும் வசதி, தரகு கட்டணம் இல்லாத சேவை, வெறும் ரூ.100 முதல் முதலீடு செய்யும் வாய்ப்பு உள்ளிட்ட சிறப்பம்சங்கள் மூலம் நிலையான வருவாய் முதலீடுகளை எளிமையாக்கியுள்ளது.
தனது நியமனம் குறித்து எஸ். சம்பத் குமார் கூறியதாவது "பாண்ட்பஜார் நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கியமானதொரு கட்டத்தில் அதன் குழுவில் இணைவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் நிலையான வருவாய் முதலீட்டுச் சந்தையில் சில்லறை முதலீட்டாளர்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்குப் பெரும் வாய்ப்புகள் உள்ளன. இந்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதில் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கும். முதலீட்டுத் தளத்தை மேலும் வலுப்படுத்துதல், எங்களது சேவைகளின் அணுகலை விரிவுபடுத்துதல், இந்தியா முழுவதும் உள்ள முதலீட்டாளர்களுக்கு எளிமையான, வெளிப்படையான மற்றும் நம்பகமான முதலீட்டு அனுபவத்தை வழங்குதல் ஆகியவற்றில் எங்களது கவனம் இருக்கும்."
இந்த நியமனத்தின் மூலம், தனது தொழில்நுட்பத் தளத்தை மேலும் வலுப்படுத்துதல், டிஜிட்டல் முதலீட்டு அனுபவத்தை மேம்படுத்துதல் மற்றும் விநியோக வலையமைப்பை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் பாண்ட்பஜார் கவனம் செலுத்தவுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் நிலையான வருவாய் முதலீட்டுச் சந்தையில் சில்லறை முதலீட்டாளர்களின் பங்களிப்பை மேலும் அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
