சென்னை 21, அக்டோபர் 2026: மைசூரு தசரா விழா வின் ஒரு பகுதியாக, இந்திய விமானப்படை யின் புகழ்பெற்ற சூர்ய கிரண் வான்சாகசக் குழு, நேற்று 20 நிமிடங்கள் வானில் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி பார்வையாளர் களை பரவசப்படுத்தி யது. உலகபுகழ்பெற்ற தசரா விழாவை முன்னிட்டு மைசூரு பன்னிமண்டபத்தில் உள்ள டார்ச்லைட் பரேடு மைதானத்தில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியைக் காண ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது விமானங்கள் வானில் சீறிப்பாய்ந்து, ஒன்றையொன்று நெருங்கியபடி துல்லியமான அணி வகுப்புகளையும், பல்வேறு வான் சாகசங் களையும் நிகழ்த்தின. மொத்தம் சுமார் 18 வகையான சாகசங்கள் இடம்பெற்றன.
முன்னதாக, நேற்று முன்தினம் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சி, மோசமான வானிலை காரணமாக முழுமை யாக நடத்த முடியாமல் பாதியில் நிறுத்தப் பட்டது. இந்நிலையில், நேற்று வானிலை ஓரளவு சாதகமாக இருந்ததால், திட்ட மிட்டபடி நிகழ்ச்சியை நடத்தி முடித்ததாக விமானப்படை வீரர் ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தற்போது வானிலை மிகவும் சிறப்பாக இருந்தது. வானில் மேகமூட்டம் காணப்பட்ட போதி லும், திட்டமிட்டபடி சுமார் 18 சாகசங்களை நிகழ்த்தினோம்” என்றார்.
நிகழ்ச்சியைக் காண வந்திருந்த பார்வை யாளர்களின் உற்சாக மான வரவேற்புக்கு நன்றி தெரிவித்த அவர், அனைவருக்கும் தசரா வாழ்த்துகளையும் தெரி வித்தார். துல்லியமான விமான இயக்கம், ஒருங்கிணைந்த அணிவகுப்பு மற்றும் விமானங்கள் ஒன்றுக் கொன்று மிக அருகில் பறந்து நிகழ்த்தும் பிரமிக்க வைக்கும் சாகசங்கள் ஆகியவற் றுக்குப் பெயர் பெற்றது சூர்ய கிரண் குழு. மைசூரு தசரா விழாவில் நடைபெற்ற இந்த வான் சாகச நிகழ்ச்சி பார்வை யாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.
