சென்னை – 8 நவம்பர், 2026 மேற்கு ஆசியாவில் இருக்கும் அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு போர் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற ஹவதிக்களால் அமெரிக்கா அதிகாரிகள் தாக்குதல்களுக்கு ஆளாகலாம் என அமெரிக்க கூறியுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.15 நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சவுதி அரேபிய,ஈரான்,இஸ்ரால்,ஈராக்,கத்தார். யூஏ,ஏமன், சிரியா,ஓமான்,லெபனான்,குவைத், ஜோர்டன், எகிப்துக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா கட்டமைப்புகளை ஈரான் குறிவைக்கக்கூடும் என்று ட்ரம்ப் அரசு ஏற்கனவே எச்சரிக்கை குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலில் உள்ள அமெரிக்கா கட்டைமைப்பையும் ஈரான் குறிவைக்கலாம் என்று ட்ரம்ப் அரசு குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் ஈரான் போர் மேலும் தீவிரம் அடையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இடைக்கால தேர்தலுக்கு பிறகு ட்ரம்ப் ஈரான் போரை தீவிரப்படுத்தலாம் என்ற நிலையில் இந்த எச்சரிக்கை எடுத்துக்கொள்ளப்படுகிறது.தீவிரவாத தாக்குதல் கடத்தல், அபாயம் இருப்பதால் ஈரானுக்கு பயணிக்க வேண்டாம் என்று குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஈரானில் உள்ள அமெரிக்கர்களை உடனே வெளியேற ட்ரம்ப் அரசு அக் 23 -ல் எச்சரிக்கை விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
