சென்னை, 16 அக்டோபர் 2026: மாலத்தீவு கடலோரக் காவல்படையினரால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 25 பேரை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரி, முதல்வர் விஜய் ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார். கடந்த அக்டோபர் 13 அன்று 3 மீன்பிடி விசைப்படகுகளுடன் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 25 பேர் மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர். தருவைக்குளத்தில் இருந்து 3 விசைப் படகுகளில் மொத்தம் 30 மீனவர்கள் கடலுக்கு மீ ன்பிடிக்கச் சென் றுள்ளனர்.
தருவைக்குளத்தைச் சேர்ந்த மிக்கேல், ராஜன், சங்கர் ஆகி யோரது விசைப்படகு களில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். தடை செய்யப்பட்ட பகுதி யில் மீன் பிடித்ததாகக் கூறி, தூத்துக்குடி மீனவர்கள் 30 பேரை மாலத்தீவு கடற்படை சிறைபிடித்ததால் கிராம மக்கள் மற்றும் மீனவர் சங்கத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசு உடனடி யாக தலையிட்டு மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் மாலத்தீவு கடலோரக் காவற்படையினரால் கைது செய்யப்பட் டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 25 மீனவர்களை விடுவிக்கவும். அவர் களின் 3 மீன்பிடி விசைப்படகுகளை மீட்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கோரி, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு, முதல்வர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்.
மாலத்தீவு கடற் படையினரால் கைது செய்யப்பட் டுள்ள தமிழக மீனவர் களையும் அவர்களின் விசைப்படகுகளையும் பாதுகாப்பாக மீட்டு, அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இணைய ஒன்றிய அரசு உடனடியாக தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.
