hello madras mobile banner 1200x300

மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் பெண் குழந்தைகள் கடத்தப்படும் விவகாரம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

சென்னை – 4 நவம்பர், 2026 மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் உள்ள பல்வேறு மாவட்டங்களில், வறுமையின் காரணமாக பெண் குழந்தைகள் 3 முதல் 5 லட்சம் ரூபாய் வரை இடைத்தரகர்களிடம் விற்பனை செய்யப்படுவதாக, 2026 அக்டோபர் 30-ம் தேதி ஊடகங்களில் செய்தி வெளியானது. விற்பனை செய்யப்பட்ட சிறுமிகளை, தத்தெடுக்கப்பட்டதாக போலி ஆவணங்கள் தயாரித்து கடத்திச் செல்கின்றனர். சிறுமிகள் பெரியவர்கள் ஆனதும், பாலியல் தொழிலுக்காக மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் 35 முதல் 40 லட்சம் ரூபாய்க்கு விற்பதாகவும் செய்தி வெளியானது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளின் மனித உரிமைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளதாக கருதுவதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், டிஜிபிக்கள் ஆகியோருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக 2 வாரங்களில் பதில் அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

Read the full e-paper

Translate »