hello madras mobile banner 1200x300

இந்திய அறிவியல், தொழில்நுட்ப மதிப்பெண் பலகையை நித்தி ஆயோக் அறிமுகப்படுத்தியுள்ளது

சென்னை – 4 நவம்பர், 2026 குடிமைப் பணி அதிகாரிகள் நிறுவனத்தில், இந்திய அறிவியல், தொழில்நுட்ப மதிப்பெண் பலகையை நித்தி ஆயோக் அறிமுகப்படுத்தியுள்ளது.

புதுதில்லியில் உள்ள கே ஜி மார்க் பகுதியில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தின் வளாகத்தில் நவம்பர் 3-ம் தேதியன்று, இந்தப் பலகைத் தொடங்கப்பட்டது.

நித்தி ஆயோக் துணைத் தலைவர் அசோக் குமார் லாஹிரி இதனைத் தொடங்கி வைத்தார். நித்தி ஆயோக்கின் ஒரு முக்கிய முன்னெடுப்பாக உருவாக்கப்பட்ட இந்த மதிப்பெண் பலகை, இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் அறிவியல், தொழில்நுட்பச் சூழலை ஒருங்கிணைந்த முறையில் எடுத்துக்காட்டும் ஒரு தளமாகும்.

இது, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், ஆதாரங்களின் அடிப்படையில் கொள்கைகளை வகுப்பதற்கும், செயல்திறனை ஒப்பிட்டு மதிப்பிடுவதற்கும் உதவிடும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய நித்தி ஆயோக் மூத்த ஆலோசகர் பேராசிரியர் விவேக் குமார் சிங், இந்த முன்முயற்சியின் நோக்கங்களை விளக்கினார்.

தரவுகள் குறித்த வெளியீடுகளின் எண்ணிக்கை மட்டுமின்றி, அதன் தரம், தாக்கம், ஒத்துழைப்பு ஆகியவற்றையும் இந்த மதிப்பெண் பலகை உள்ளடக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதன் மூலம், மாநிலங்கள் தங்களது நிபுணத்துவத்தையும், கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய துறைகளையும் கண்டறிய முடியும்.

Read the full e-paper

Translate »