hello madras mobile banner 1200x300

மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழை வீட்டிலிருந்தபடியே சமர்ப்பிக்க அஞ்சல்துறை வசதி

சென்னை – 14 நவம்பர், 2026 மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டிய டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை (Digital Life Certificate) வீட்டிலிருந்தபடியே சமர்ப்பிக்கும் வசதி அஞ்சல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை நகர வடக்கு கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக அருகிலுள்ள அஞ்சல் நிலையத்தையோ அல்லது அஞ்சல் ஊழியரையோ தொடர்பு கொள்ளலாம்.

ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆதார் எண், மொபைல் எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு எண் ஆகிய விவரங்களை வழங்கினால், அஞ்சல் மூலம் பயோமெட்ரிக் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டு, வீட்டிலிருந்தபடியே டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் உருவாக்கப்படும். இந்த சேவைக்கு ரூ.70 சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும். இதன் மூலம் ஓய்வூதியதாரர்கள் தபால் நிலையத்திற்கு நேரில் செல்வதைத் தவிர்த்து, தங்களது வீட்டிலேயே எளிதாக உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.

எனவே, சென்னை நகர வடக்கு கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், அஞ்சல் துறையின் இந்த வசதியைப் பயன்படுத்தி உரிய காலத்திற்குள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Read the full e-paper

Translate »