hello madras mobile banner 1200x300

மதுரை மாவட்டம் பாண்டி கோவில் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி ஆலோசனை கூட்டம்..

மதுரை மாவட்டம் பாண்டி கோவில் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் முல்லைப் பெரியாறு நீர்பாசன சங்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி மாநில அளவிலான விவசாய அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜ் தலைமை தாங்கினார். விவசாய அணி மாநில துணைத்தலைவர் முத்துராமன்ஜி, மாவட்ட தலைவர் மகா சுசிந்திரன், மாநில விவசாய அணி செயலாளர் மணி முத்தையா, மாவட்ட விவசாய அணி தலைவர் பூமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முல்லை பெரியாறு நீர்பாசன சங்க தலைவர் சதீஷ் பாபு மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பாஜக விவசாய அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் நீர்நிலைகளை மேம்படுத்துவது முல்லை பெரியாறு அணை மற்றும் வைகை அணையை தூர் வாரி அணையின் கொள்ளளவை அதிகரிப்பது, உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »