hello madras mobile banner 1200x300

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்..

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் செங்கல் கல் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் புதிய தலைவராக குமாரசாமி பொறுப்பேற்று தலைமை தாங்கினார். செயலாளராக அழகாபுரி பார்த்திபன், பொருளாளர் சேகர், துணை தலைவர் மணி, துணை செயலாளர் முத்து பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலங்கை கோவிந்தராஜ், யோகிதா முருகன் ஆகியோர் வரவேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் செங்கல் தயாரிப்பு தொழில் நலிவடைந்து வருவதால் அதனை எவ்வாறு சரி செய்வது மற்றும் செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு, மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்து சங்கத்தை பதிவு செய்வது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சரவணன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »