சென்னை, ஆலந்தூர், ஹாஜி தெருவில் வசித்து வரும் ஹாஜா நஜிமுதீன், வ/42,
த/பெ.அப்துல்காதர் என்பவர் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து
வருவதாகவும், இவரிடம் கடந்த 3 ஆண்டுகளாக கார்த்திகேயன் என்பவர் பழைய
கார்களை வாங்கும், வாடிக்கையாளராக இருந்து வருவதாகவும், இந்த பழக்கத்தின்
காரணமாக ஹாஜா நஜிமுதீன் அவரது BMW காரை ரூ.10 லட்சத்திற்கு கார்த்திகேயனிடம்
விலை பேசி, ஒப்பந்தம் செய்து, முன்பணமாக ரூ.1 லட்சம் பெற்றுக் கொண்டு, கடந்த
26.06.2026 அன்று BMW காரை கிண்டி, கத்திபாரா பாலம் அருகில் கார்த்திகேயன்
பெற்றுக் கொண்டதாகவும், மீதி பணம் ரூ.9 லட்சத்தை பின்னர் தருவதாக கூறிவிட்டு
சென்ற நிலையில், பலமுறை கார்த்திகேயனிடம் மீதி பணம் கேட்டும் தராத
காரணத்தினால், ஹாஜா நஜிமுதீன் அவரது செல்போன் செயலி மூலம் BMW காரின்
இருப்பிடத்தை அறிந்து, ஆரணி பகுதிக்கு சென்று விசாரித்தபோது, மேற்படி காரை
விக்னேஷ் என்பவரிடம் ரூ.5 லட்சத்திற்கு கார்த்திகேயன் அடமானம் வைத்திருப்பது
தெரியவந்ததாகவும், எனவே தன்னிடம் ரூ.1 லட்சம் கொடுத்துவிட்டு, காரை பெற்றுக்
கொண்டு, ரூ.5 லட்சத்திற்கு காரை அடமானம் வைத்து, ஏமாற்றிய கார்த்திகேயன் மீது
உரிய நடவடிக்கை எடுத்து, தனது காரை மீட்டுத் தருமாறு ஹாஜா நஜிமுதீன் என்பவர் S-
1 புனியதோமையர்மலை காவல் நிலைய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின்பேரில்
மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு போலீசார் செய்து விசாரணை
மேற்கொண்டனர்.
S-1 புனியதோமையர்மலை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர்
தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்ததில், புகார்தாரர்
குறிப்பிட்டிருப்பது உண்மையென தெரியவந்தின்பேரில், BMW காரை பெற்றுக் கொண்டு,
ஏமாற்றிய எதிரி கார்த்திகேயன், வ/35, ஆதம்பாக்கம், சென்னை என்பவரை கைது
செய்தனர். மேலும் ஆரணியில் இருந்து புகார்தாரரின் BMW கார் மீட்கப்பட்டு, குற்ற
செயலுக்கு பயன்படுத்திய எதிரியின் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் எதிரி கார்த்திகேயன் என்பவர் மீது ஏற்கனவே 4 மோசடி வழக்குகள்
உள்ளது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட எதிரி கார்த்திகேயன் விசாரணைக்குப் பின்னர், நேற்று
(24.09.2026) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில்
அடைக்கப்பட்டார்.
