hello madras mobile banner 1200x300

பட்டாசுகளால் ஏற்படும் கண் காயங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உதவும் வகையில் ‘பாதுகாப்பான கண்கள், பாதுகாப்பான தீபாவளி’ என்ற விழிப்புணர்வைத் தொடங்கும் வாஸன் கண் மருத்துவமனை!

சென்னை – 6 நவம்பர், 2026 சென்னை 03 நவம்பர் 2026: ASG ஹாஸ்பிட்டல் லிமிடெட்டின் ஒரு அங்கமான வாஸன் கண் மருத்துவமனை ஆனது பண்டிகைக் காலத்தையொட்டி குழந்தைகளின் கண் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் 'பாதுகாப்பான கண்கள், பாதுகாப்பான தீபாவளி' என்ற சிறப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பட்டாசுகளால் கண் காயங்களுக்கு உள்ளாகும் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, CSR நிதி உதவியுடன் வாஸன் கண் மருத்துவமனை மையங்களில் சிகிச்சைகள் வழங்கப்படும். இச்சேவை, நவம்பர் 4, 2026 முதல் நவம்பர் 14, 2026 வரை 95-க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள 200-க்கும் அதிகமான வாஸன் கண் மருத்துவமனை மற்றும் ஏஎஸ்ஜி கண் மருத்துவமனை மையங்களில் கிடைக்கும்.

இந்த பிரச்சாரத்தின் செய்தி எளிமையானது – பொறுப்புடன் பண்டிகையைக் கொண்டாடுங்கள், ஒவ்வொரு குழந்தையின் கண்ணிலும் உள்ள ஒளியைப் பாதுகாருங்கள். இந்த முயற்சியின் கீழ் முதலுதவி, அவசர கண் சிகிச்சை, மருந்துகள் மற்றும் தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை வழங்கப்படும். கண்ணாடி போன்ற பார்வை சாதனங்கள் இதில் சேர்க்கப்படவில்லை, மேலும் சில விதிமுறைகளும் நிபந்தனைகளும் பொருந்தும். வழிகாட்டுதலுக்கும், அருகிலுள்ள பங்கேற்கும் மையத்தைத் தெரிந்துகொள்ளவும் குடும்பங்கள் பிரத்யேக உதவி எண் 1800 5713 333 ஐ அழைக்கலாம்.

ஒவ்வொரு தீபாவளியின் போதும் பட்டாசுகளால் ஏற்படும் கண் காயங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, அதில் பெரும்பாலான பாதிப்புகள் குழந்தைகளுக்கே ஏற்படுகின்றன. கருவிழி மற்றும் கண்ணின் முன்பகுதியில் ஏற்படும் காயங்கள் மிகவும் பொதுவானவை. இவற்றை கண் மருத்துவரிடம் உடனடியாகக் காண்பித்து சிகிச்சை அளிக்காவிட்டால், அது நிரந்தர பார்வை இழப்புக்கும் வழிவகுக்கும். காயம் ஏற்பட்ட முதல் சில மணிநேரங்களே கண் மீண்டும் எந்த அளவிற்கு இயல்பு நிலைக்குத் திரும்பும் என்பதைத் தீர்மானிக்கின்றன. கடந்த ஆண்டு தீபாவளியின் போது, வசன் மற்றும் ஏஎஸ்ஜி மையங்களில் பட்டாசுகளால் கண் காயம் அடைந்த 500-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஎஸ்ஜி ஹாஸ்பிட்டல் லிமிடெட்டின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (MD & CEO) டாக்டர் அருண் சிங்வி கூறுகையில்: “தீபாவளி என்பது குழந்தைகள் ஆண்டு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு பண்டிகை, சில நொடிகள் பட்டாசுகளுக்கு அருகில் நடக்கும் அசம்பாவிதம் ஒரு குழந்தையின் பார்வையைப் பறித்துவிடக் கூடாது. எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பெரியவர்களின் தீவிர கண்காணிப்பு மூலம் இந்த பெரும்பாலான காயங்களைத் தவிர்க்க முடியும். ஒருவேளை காயம் ஏற்பட்டால், நேரம் மிகவும் முக்கியமானது; உடனடியாகக் குழந்தையை கண் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். 'பாதுகாப்பான கண்கள், பாதுகாப்பான தீபாவளி' என்ற இத்திட்டத்தின் மூலம், குடும்பங்கள் பாதுகாப்பாகக் கொண்டாட உதவுவதோடு, காயமடைந்த குழந்தைக்குத் தாமதமின்றி நிபுணத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்ய நாங்கள் விரும்புகிறோம்.” என்றார்.

ஏஎஸ்ஜி ஹாஸ்பிட்டல் லிமிடெட் மற்றும் வாஸன் கண் மருத்துவமனை நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி (தெற்கு மண்டலம்) டாக்டர் கே. கமல் பாபு கூறுகையில்: “தென்னிந்தியா முழுவதும் அதிகாலை பிரார்த்தனைகள், அகல் விளக்குகள் மற்றும் பட்டாசுகளுடன் தீபாவளி விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது, இதில் குழந்தைகள் தான் எப்போதும் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பார்கள். அந்த தருணத்தில் நாம் காட்டும் சிறு கவனம், ஒரு குழந்தையின் பார்வையை வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கும். பெற்றோர் குழந்தைகளைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், ஏதேனும் காயம் ஏற்பட்டால், தாமதிக்காமல் எங்கள் உதவி எண்ணை அழைத்து அருகிலுள்ள வாஸன் கண் மருத்துவமனை மையத்தையோ அல்லது அருகிலுள்ள எந்தவொரு கண் சிகிச்சை மையத்தையோ உடனடியாக அணுகுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.” என்றார்.

வாஸன் கண் மருத்துவமனை – ஏஎஸ்ஜி கண் மருத்துவமனை குடும்பங்கள் பின்பற்றுவதற்காக 5 எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவுறுத்துகிறது:

பாதுகாப்பான இடைவெளியைப் பேணுங்கள்: கையை நீட்டிய நிலையில் வைத்து நீண்ட அகர்பத்தியைப் பயன்படுத்தி பட்டாசுகளைக் கொளுத்தவும், கொளுத்திய பின் உடனடியாகப் பின்வாங்கி வரவும்.

பாதுகாப்புக் கண்ணாடிகளை அணியுங்கள்: குழந்தைகள் மற்றும் பட்டாசு கொளுத்தும் பெரியவர்கள் அனைவரும் பாதுகாப்புச் சிறப்பு கண்ணாடிகளை அணிய வேண்டும்.

குழந்தைகளைக் கண்காணிக்கவும்: பெரியவர்களின் மேற்பார்வையில் மட்டுமே குழந்தைகள் பட்டாசுகளைக் கொளுத்த வேண்டும்.

பட்டாசுகளின் மீது குனிய வேண்டாம்: பட்டாசு கொளுத்தும்போது அதன் மேல் குனியக் கூடாது, மேலும் வெடிக்காத பட்டாசுகளின் அருகே மீண்டும் செல்லக் கூடாது.

காயம்பட்ட கண்ணைக் தேய்க்கக் கூடாது: கண்ணைத் தேய்ப்பதால் துகள்கள் ஆழமாகச் சென்று காயத்தை மேலும் தீவிரமாக்கக்கூடும்.

காயம் ஏற்படும் பட்சத்தில், குழந்தையை அமைதிப்படுத்தி, இரு கண்களையும் முடிந்தவரை அசைக்காமல் அசையாமல் வைத்திருக்கவும். கண்ணைத் தேய்க்கவோ, அழுத்தவோ அல்லது அதில் சிக்கியுள்ள எதையும் அகற்ற முயற்சிக்கவோ வேண்டாம். தண்ணீரை வேகமாக ஊற்றி அலசக் கூடாது; மேலும் காஜல், களிம்புகள் (ointments), சொட்டு மருந்துகள் அல்லது எந்தவொரு வீட்டு வைத்தியத்தையும் பயன்படுத்தக் கூடாது. கண்ணின் மீது எந்த அழுத்தமும் தராமல், பேப்பர் கப் ஒன்றின் அடிப்பகுதி போன்ற ஒரு சுத்தமான மூடியைக் கொண்டு கண்ணை லேசாக மூடிப் பாதுகாக்கவும். உடனடியாக 1800 5713 333 என்ற உதவி எண்ணை அழைத்து, குழந்தையை அருகிலுள்ள வாஸன் கண் மருத்துவமனை மையத்திற்கோ அல்லது ஏதேனும் அவசர கண் சிகிச்சை மையத்திற்கோ கொண்டு செல்லவும். உடனடியாக அளிக்கப்படும் நிபுணத்துவ சிகிச்சை தான், கண் பார்வை மீண்டும் கிடைப்பதற்கும் நிரந்தர பார்வை இழப்புக்கும் இடையிலான தீர்மானிக்கும் சக்தியாக அமையும்.

Read the full e-paper

Translate »