காஞ்சிபுரம் மாவட்டம், கெருகம்பாக்கம், லஷ்மி நகரில் வசித்து வரும்
திவாகர், வ/30, த/பெ.ஏழுமலை என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை
செய்து வருவதாகவும், கடந்த 14.06.2026 அன்று காலை, நந்தம்பாக்கம்
பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்றபோது,
கவனக்குறைவாக சாவியுடன் அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு,
சாமி கும்பிட்டு, வந்து பார்த்தபோது, அவரது ஆக்டிவா இருசக்கர வாகனத்தை
யாரோ திருடிச் சென்றது தெரியவந்ததாகவும், மேற்படி திருடிய நபரை
கண்டுபிடித்து, திருடு போன தனது இருசக்கர வாகனத்தை மீட்டுத் தருமாறு
திவாகர் என்பவர் S-4 நந்தம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவில் கொடுத்த
புகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
S-4 நந்தம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்
தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி
திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட எதிரி கணேஷ், வ/42, கணபதி நகர்,
ஈக்காட்டுதாங்கல், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து
புகார்தாரரின் ஆக்டிவா இருசக்கர வாகனம் மீட்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட எதிரி கணேஷ் விசாரணைக்குப் பின்னர் நேற்று
(15.06.2026) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி
சிறையில் அடைக்கப்பட்டார்.
