சென்னை – 8 நவம்பர், 2026 இந்தியாவின் ரசாயனங்கள், பெட்ரோ ரசாயனங்கள் துறை, உற்பத்தி, முதலீடு, ஆராய்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் வேகமாக முன்னேறி வருகிறது. இத்துறையை உலக அளவில் போட்டியிடும் வலிமையான தொழில் துறையாக உருவாக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
உலக அளவில் இந்தியாவின் முக்கியத்துவம்:
உலகின் 6-வது பெரிய ரசாயன உற்பத்தி நாடாகவும், ஆசியாவின் 4-வது பெரிய நாடாகவும் இந்தியா உள்ளது. இத்துறையின் தற்போதைய மதிப்பு 220 பில்லியன் அமெரிக்க டாலர். இது 2030-ல் 300 பில்லியன் டாலராகவும், 2040-ல் ஒரு டிரில்லியன் டாலராகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாயங்கள் உற்பத்தி, ஏற்றுமதியில் 2-வது இடத்திலும், வேளாண் ரசாயனங்கள் ஏற்றுமதியில் 3-வது இடத்திலும் இந்தியா உள்ளது. இத்துறையில் 13,000 பெரிய நிறுவனங்களும், 4.45 லட்சம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களும் உள்ளன.
முதலீடும் உற்பத்தியும்:
பெரும்பாலான ரசாயனத் துறைகளில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2014–2026 காலகட்டத்தில் ரூ.1,04,895 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இது 2004–2014 காலகட்டத்தில் ஈர்க்கப்பட்ட ரூ.45,240 கோடியைவிட இரு மடங்குக்கும் அதிகம். முக்கிய ரசாயனங்கள், பெட்ரோ ரசாயனங்கள் உற்பத்தி 2015–16-ல் 4.56 கோடி டன்னிலிருந்து 2024–25-ல் 5.86 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
தொழிற்பூங்காக்களும் வேலைவாய்ப்பும்:
