hello madras mobile banner 1200x300

தீபாவளி, கோவர்தன் பூஜை, பாய் தூஜ் ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு மக்களவைத் தலைவர் வாழ்த்து

சென்னை – 8 நவம்பர், 2026 மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தீபாவளி, கோவர்தன் பூஜை, பாய் தூஜ் ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

ஓம் பிர்லா தமது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

“மகிழ்ச்சியின் மாபெரும் திருவிழாவான தீபாவளியை முன்னிட்டு அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். மேலும், கோவர்தன பூஜை, பாய் தூஜ் பண்டிகைகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீபாவளி என்பது வெறும் விளக்கேற்றி கொண்டாடும் ஒரு பண்டிகை மட்டுமல்ல. அது மற்றவர்களின் வாழ்வில் நம்பிக்கை, மகிழ்ச்சி எனும் ஒளியை நிரப்புவதற்கான ஒரு வாய்ப்பும் ஆகும்.

ஒரு விளக்கு சுற்றிலும் ஒளியைப் பரப்புவதைப் போல, நமது மகிழ்ச்சி மற்றவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியைக் கொண்டுவருவதை உறுதிசெய்ய, நாம் முயற்சி செய்வோம். நமது சொந்தக் குடும்பத்தினரின் முகத்தில் மட்டுமல்லாமல், அனைவரது முகங்களிலும் புன்னகையைக் கொண்டுவர உறுதியேற்போம். தேவையுள்ளவர்களுக்கு உதவுங்கள். அவர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுங்கள். சமூகத்தில் அன்பு, நல்லிணக்கம் பரஸ்பர ஒத்துழைப்பை வளர்த்தெடுங்கள்.

நம்மைச் சுற்றியுள்ள எவரும் தனிமையாகவோ அல்லது புறக்கணிக்கப்பட்டதாகவோ உணராதபோதுதான் நமது தீபாவளி உண்மையான அர்த்தமுள்ளதாக அமையும்.

இந்த மங்களகரமான நாளில், நாட்டின் எல்லைகளைக் காக்கும் நமது வீரமிக்க படைவீரர்களுக்கும், நாட்டின் தானியக் களஞ்சியங்களை நிரப்பும் நமது விவசாய சகோதரர்களுக்கும், தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும், தொழில்முனைவோருக்கும், வணிகர்களுக்கும், நாட்டு மக்கள் அனைவருக்கும் சிறப்பு வணக்கங்கள்.

Read the full e-paper

Translate »