hello madras mobile banner 1200x300

தொலைத்தொடர்பு இணைப்பு (துறைமுகக் கட்டணங்கள்) (மூன்றாவது திருத்தம்) ஒழுங்குமுறைகள், 2026 வெளியிடப்பட்டுள்ளது

சென்னை – 10 நவம்பர், 2026 தொலைத்தொடர்பு இணைப்பு (துறைமுகக் கட்டணங்கள்) (மூன்றாவது திருத்தம்) ஒழுங்குமுறைகள் 2026- ஐ இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இன்று வெளியிட்டது.

இது 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. தொலைத்தொடர்பு இணைப்பு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தொலைத்தொடர்பு கட்டமைப்புகளை இணைக்கக்கூடிய தொழில்நுட்ப, செயல்பாடு, வர்த்தக ரீதியிலான ஏற்பாடுகளைக் குறிக்கும்.

திருத்தப்பட்ட ஒழுங்குமுறையின் முக்கிய அம்சங்கள்:

ஐபி போர்ட்டுகளுக்கான அங்கீகாரம்:

போர்ட் என்ற வரையறை பழைய இ- 1 போர்ட்டுகள், ஐபி போர்ட்டுகள் இரண்டையும் உள்ளடக்கும் வகையில் திருத்தப்பட்டுள்ளது.

ஆண்டு ஐபி போர்ட் கட்டணங்களுக்கான உச்சவரம்பு:

ஒரு ஜிபிபிஎஸ் ஐபி போர்ட்டுக்கு ரூ. 5.6 லட்சம், 10 ஜிபிபிஎஸ் ஐபி போர்ட்டுக்கு ரூ. 42.3 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Read the full e-paper

Translate »