hello madras mobile banner 1200x300

தேசிய லோக் அதாலத் நீதிமன்றங்களின் மூலம் சென்னை பெருநகர காவல்துறையில் மொத்தம் 2,715 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.A.அமல்ராஜ்,
இ.கா.ப., அவர்கள் உத்தரவுப்படி, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட
சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்
நிலையங்களிலும் மற்றும் மத்திய குற்றப்பிரிவிலும் பதிவு செய்யப்பட்டுள்ள
குற்றவியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து உள்ளிட்ட வழக்குகளில்,
பொதுமக்களுக்கு விரைவான நீதி கிடைப்பதற்கும், நீண்ட காலமாக நிலுவையில்
உள்ள சமரசம் செய்து, தீர்க்கக்கூடிய வழக்குகளில் சுமூகமான முடிவுக்கு கொண்டு
வருவதற்கும், சட்டபூர்வமான முறையில் சமரச தீர்வு கண்டு, நிலுவையில் உள்ள
நீண்ட கால வழக்குகளை குறைக்க சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட
பகுதியில் நடைபெறும், தேசிய லோக் அதாலத் நீதிமன்றங்களில் (National Lok
Adalat-2026) வழக்குகளை முடிக்க அனைத்து காவல் அதிகாரிகளுக்கும்
அறிவுறுத்தியிருந்தார்.
அதன்பேரில், சென்னை பெருநகர காவல் எல்லையில் நேற்று (12.09.2026)
தேசிய லோக் அதாலத் நீதிமன்றங்களில் நடைபெற்ற வழக்குகளில், கிழக்கு
மண்டலத்தில் 644 வழக்குகளும், தெற்கு மண்டலத்தில் 517 வழக்குகளும், வடக்கு
மண்டலத்தில் 457 வழக்குகளும், மேற்கு மண்டலத்தில் 1,094 வழக்குகளும், மத்திய
குற்றப்பிரிவில் 3 வழக்குகளும் என மொத்தம் 2,715 வழக்குகள் தேசிய லோத்
அதாலத் நீதிமன்றங்களின் மூலம் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
லோத் அதாலத் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகளை முடிக்க
சிறப்பாக பணிபுரிந்த காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் நீதிமன்ற அலுவல்
புரியும் காவல் ஆளிநர்களை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள்
வெகுவாக பாராட்டினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »